“தவெகவுக்குத் தோல்வியைக் கொடுத்து துரத்தியடியுங்க” - மு.க.ஸ்டாலின் வாக்காளர்களுக்குக் கோரிக்கை!

 
ஸ்டாலின் தாராபுரம்

தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்த நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாகத் தாராபுரம் தொகுதி வாக்காளர்களுக்குத் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.

வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்குச் செல்லும் முன்பு தற்போதைய மின்கட்டண உயர்வையும், மளிகைப் பொருட்களின் விலையையும் மனதில் கொண்டு சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.


"தன்மானமிக்க தாராபுரம் வாக்காளப் பெருமக்களே... தவெகவுக்குத் தோல்வியைக் கொடுத்து துரத்தி அடியுங்கள்" என்று அவர் கடுமையாகச் சாடியுள்ளார். தாராபுரம் தொகுதியின் வளர்ச்சிக்காக உண்மையாக உழைக்கக்கூடிய, திமுக சார்பில் போட்டியிடும் "உங்கள் வீட்டுப் பெண்" எஸ்.சுகன்யா அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்துப் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.