நாதக வேட்பாளர் கார்த்திகா கைது - மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!

 
கார்திகா

தாராபுரம் இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது பதிவான வழக்கில் நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை பொறுப்பாளரும், முன்னாள் வேட்பாளருமான கார்த்திகா கைது செய்யப்பட்ட விவகாரத்திற்குப் பலத்த கண்டனங்கள் எழுந்துள்ளன.

கார்த்திகா

தாராபுரம் தேர்தல் வழக்கில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா கைது செய்யப்பட்டுள்ளதை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாகச் சாடியுள்ளார். ஒடுக்கப்பட்ட பெண்களின் பொதுவாழ்வு நடவடிக்கைகளை ஊக்குவிக்காமல், தவெக அரசு அவர்களுக்கு வாய்ப்பூட்டுப் போடுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

தாராபுரம் இடைத்தேர்தல் நாதக கார்த்திகா

போதைப்பொருள் தொடர்பான விவகாரங்களை மறைக்கவும், தற்போதைய தேர்தல் முறைகேடுகளைக் கேள்வி கேட்டவர்களைப் பழிவாங்குவதற்காகவுமே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், தமிழகத்தில் எதிர்க்கட்சிகளை ஒடுக்குவதில் டெல்லி பாஜகவுக்கும் தமிழகத்தில் உள்ள தவெக அரசுக்கும் இடையே போட்டி நிலவுவதாகவும் கடுமையாக விமர்சித்துள்ள அவர், கார்த்திகாவை நிபந்தனையின்றி உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.