மூர்த்தி வீட்டில் சோதனை ஏன்? மக்களை திசைதிருப்பவே தவெக அரசு நடவடிக்கை - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

 
ஸ்டாலின்

 

மதுரையில் திமுக முன்னாள் அமைச்சர் மூர்த்தியின் வீட்டில் போலீசார் சோதனை நடத்தி வரும் நிலையில், இதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் போதைப்பொருள் கடத்தல் சம்பவங்களை மத்திய அரசின் அமைப்புகள் கண்டுபிடித்து வரும் நிலையில், அவற்றிலிருந்து மக்களையும் ஊடகங்களையும் திசைதிருப்பவே மூர்த்தியைக் குறிவைத்து சோதனை நடத்தப்படுவதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

ஸ்டாலின்

மேலும், தவெக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு மற்றும் கட்சியினரின் குற்றச்செயல்கள் குறித்த புகார்கள் எழும்போதெல்லாம் திமுக முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் சோதனை நடத்தப்படுவதாகவும் விமர்சித்துள்ளார்.

அரசியல் காரணங்களுக்காகத் தொடரப்படும் வழக்குகளை நீதிமன்றத்தில் சட்டப்படி எதிர்கொள்வோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆறு மாத ஆட்சியில் சாதனைகள் ஏதுமின்றி மக்களின் அவநம்பிக்கையைப் பெற்றுள்ள முதல்வர் விஜய், திமுகவை விமர்சிப்பதன் மூலம் மக்களை ஏமாற்ற முடியாது என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார்.

தவெக ஆட்சியில் மின்வெட்டை மிஞ்சும் அரிவாள் வெட்டு: 24 மணி நேரத்தில் 7 சம்பவங்கள்- ஸ்டாலின் விமர்சனம் - mk stalin condemns vijay tvk govt for murders overtook power cut ...

இதற்கிடையே, மதுரை பாலமேடு, அலங்காநல்லூர் பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக செம்மண் மற்றும் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பாகவே மூர்த்தியின் வீட்டில் சோதனை நடைபெறுகிறது. கல்குவாரி டெண்டர் தொடர்பான ஆவணங்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.