"அவசரநிலை காலத்தை நினைவுபடுத்தும் அடக்குமுறை" - மு.க.ஸ்டாலின் கண்டனம்!

 
டெல்லி

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருவோர் மீது நடத்தப்பட்டு வரும் ஒடுக்குமுறைகளுக்குத் தீவிர கண்டனம் தெரிவித்துள்ள மு.க.ஸ்டாலின், தான் நேரில் அனுபவித்த அவசரநிலைக் காலத்தின் கொடூரங்களை இது நினைவுபடுத்துவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

டெல்லி

டெல்லியிலும் நாட்டின் பிற பகுதிகளிலும் ஜனநாயக முறையில் போராட்டம் நடத்தும் அரசியல் தலைவர்கள், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள ஒடுக்குமுறை நடவடிக்கை, தான் கடந்து வந்த அவசரநிலைக் காலத்தின் வடுக்களை மீண்டும் கண்முன்னே நிறுத்துவதாக அவர் தனது சமூக வலைதளப் பதிவில் தெரிவித்துள்ளார்.

டெல்லி மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் தலைவர்கள், மாணவர்கள் மற்றும் இளைய தலைமுறையினர் அனைவரையும் உடனடியாக நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

டெல்லி தடியடி

மத்திய அரசு ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் செயல்களை உடனடியாகக் கைவிட வேண்டும் என்றும், கருத்துரிமை மற்றும் அமைதியான முறையில் போராடும் உரிமையைக் குற்றமாகப் பார்க்கக் கூடாது என்றும் ஸ்டாலின் அதில் சுட்டிக்காட்டியுள்ளார்.