நடிகை சவுகார் ஜானகி மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்!

 
சவுக்கார்

இன்று மதியம் பழம்பெரும் நடிகை 'சவுகார்' ஜானகி உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி காலமானார். இந்நிலையில் நடிகை சவுகார் ஜானகி மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்..

அவரது இரங்கல் செய்தியில், தெலுங்கை தாய்மொழியாகக் கொண்டவர் என்றபோதிலும், தமிழில் அறிமுகமான வளையாபதி திரைப்படத்தில் பாவேந்தர் பாரதிதாசனின் வரிகளை சிறப்பாக உச்சரித்து கலைஞரின் கவனத்தை ஈர்த்தவர். கலைஞர் மீது அளவுகடந்த மரியாதை கொண்டவராக இருந்து, எங்கள் குடும்பத்தினரோடும் நட்போடு பழகிய சிறந்த மனிதப் பண்பைக் கொண்டவர். அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.