ஊடகவியலாளர் ப.திருமாவேலனுக்கு 'முரசொலி செல்வம் விருது' - மு.க.ஸ்டாலின் வழங்கிச் சிறப்பு!

 
திருச்சி சிவா

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில், முரசொலி அறக்கட்டளை சார்பில் ஊடகவியலாளரும் எழுத்தாளருமான ப.திருமாவேலனுக்குச் சிறப்புமிக்க 'முரசொலி செல்வம் விருது' வழங்கித் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கெளரவித்துள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று கோலாகலமாக நடைபெற்று வரும் திமுக முப்பெரும் விழாவில், முரசொலி அறக்கட்டளை சார்பில் பத்திரிகையாளரும் எழுத்தாளருமான ப.திருமாவேலனுக்கு 'முரசொலி செல்வம் விருது' வழங்கப்பட்டது.

திமுக துணைப் பொதுச்செயலாளர் திருச்சி சிவா

இந்த விழாவில் பல்வேறு முக்கியப் பிரமுகர்களுக்குத் தகுந்த விருதுகள் அறிவிக்கப்பட்டு வழங்கப்படுகின்றன. அதன்படி, பெரியார் விருது கு. செல்லப்பாவுக்கும், அண்ணா விருது சேலம் ஜி.கே.சுபாஷுக்கும், கலைஞர் விருது திருச்சி சிவா எம்.பி.-க்கும் வழங்கப்படுகிறது.

மேலும், பாவேந்தர் விருது கனிமொழி என்.வி.என்.சோமுவுக்கும், பேராசிரியர் விருது மிசா எஸ்.அகமது தம்பிக்கும், மு.க.ஸ்டாலின் விருது நா.இளையராஜாவுக்கும் வழங்கப்பட்டுச் சிறப்பிக்கப்படுகின்றனர்.