திமுக சட்டத்துறை வழக்கறிஞர்களுடன் மு.க. ஸ்டாலின் அவசர ஆலோசனை!
தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக இந்தியா கூட்டணித் தலைவர்கள் இன்று சென்னை வரவுள்ள நிலையில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கட்சியின் சட்டத்துறை வழக்கறிஞர்களுடன் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார். ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று மாலை 4 மணிக்கு இந்தியா கூட்டணித் தலைவர்களுடனான சந்திப்பு நடைபெறவுள்ளது.
திருத்தப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதா மற்றும் அதனால் ஏற்படும் சட்ட, அரசியல் தாக்கங்கள் குறித்து திமுக வழக்கறிஞர்கள் வில்சன், என்.ஆர். இளங்கோ உள்ளிட்டோருடன் மு.க. ஸ்டாலின் விரிவாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

தொகுதி மறுவரையறை மசோதாவுக்குத் திமுக ஆதரவு அளித்துள்ள நிலையில், அந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்துவதற்காக சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, எம்.ஏ. பேபி, மம்தா பானர்ஜி உள்ளிட்ட இந்தியா கூட்டணித் தலைவர்கள் இன்று மாலை 4 மணியளவில் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள மு.க. ஸ்டாலினின் இல்லத்தில் அவரைச் சந்திக்க உள்ளனர்.
