தியாக திருவுளம் வ.உ.சி 155-வது பிறந்தநாள் - மு.க.ஸ்டாலின் புகழாரம்!

 
வ.உ. சிதம்பரனார் வ.உ.சி

கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனாரின் 155-வது பிறந்தநாளையொட்டி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளப் பதிவில் புகழாரம் சூட்டியுள்ளார்.

நாட்டின் விடுதலைக்காகச் செக்கிழுத்து, ஆங்கிலேயரை எதிர்த்துச் சுதேசி கப்பல் விட்ட வ.உ.சி., சுதந்திரப் போராட்டத்துடன் நின்றுவிடாமல் திருக்குறளுக்கு உரை எழுதியுள்ளார், தொல்காப்பிய உரையைப் பதிப்பித்துள்ளார், ஆங்கில நூல்களை மொழி பெயர்த்துள்ளார் மற்றும் அந்நாளிலேயே தொழிலாளர் உரிமைக்காகவும் போராடியுள்ளார்.

தூத்துக்குடி வ.உ.சி துறைமுகம்

பன்முக ஆளுமையான வ.உ.சி.யின் வாழ்வும் பணிகளும் அனைவரையும் சென்றடையும் வகையில் கடந்த ஐந்தாண்டு கால திராவிட மாடல் அரசு பல்வேறு சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

1908 ஆம் ஆண்டு திருநெல்வேலி எழுச்சிக்கான நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. தற்போதைய அரசும் அத்திட்டத்தைக் கைவிடாமல் உடனடியாக நிறைவேற்றிட வேண்டும் என்று வ.உ.சி. பிறந்தநாளில் கோரிக்கை விடுத்துள்ளார்.