கொளத்தூரில் மு.க.ஸ்டாலின் 2வது முறையாகத் தோற்பார் - ஷாலின் மரிய லாரன்ஸ்!
கொளத்தூர் தொகுதியில் மீண்டும் ஒரு இடைத்தேர்தல் நடைபெற்றால், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரண்டாவது முறையாகவும் தோல்வியைச் சந்திப்பார் என்று சமூக செயற்பாட்டாளர் ஷாலின் மரிய லாரன்ஸ் தனது சமூக வலைதளப் பதிவில் தெரிவித்துள்ளார்.
சமூக செயற்பாட்டாளர் ஷாலின் மரிய லாரன்ஸ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், அரசியல் சூழல் மற்றும் தவெக எம்எல்ஏ குறித்த விவகாரங்கள் குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ளார்.

கொளத்தூர் தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு தனது இறுதிக்கட்டத்தில் உள்ளதாக செய்திகள் சமூக வலைத்தளங்களில் பரவி வரும் நிலையில், மு.க.ஸ்டாலினைத் தோற்கடித்ததால் தான் அவருக்கு இந்த நிலை என்று திமுகவினர் 'கர்மா' என்று கூறி சமூக வலைதளங்களில் பேசி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்குப் பதிலளிக்கும் வகையில் கருத்துத் தெரிவித்துள்ள அவர், உண்மையான 'கர்மா' என்பது கொளத்தூரில் மு.க.ஸ்டாலின் இரண்டாவது முறையாக இன்னும் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோற்பது தான் என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
