நாளை திருவாரூரில் பிரசாரத்தைத் தொடங்குகிறார் மு.க. ஸ்டாலின் - திமுகவினருக்குக் கடும் உத்தரவு!
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை மார்ச் 31ம் தேதி திருவாரூரில் இருந்து தனது சூறாவளிப் பிரசாரத்தைத் தொடங்குகிறார்.
நாளை மாலை திருவாரூர் தெற்கு ரத வீதியில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் உரையாற்றுகிறார். இதில் பூண்டி கலைவாணன் (திருவாரூர் - திமுக), டி.ஆர்.பி. ராஜா (மன்னார்குடி - திமுக), திருத்துறைப்பூண்டி (இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளர்), நன்னிலம் (எஸ்டிபிஐ வேட்பாளர்) ஆகிய வேட்பாளர்களுக்கு அவர் வாக்கு சேகரிக்கிறார்.

ஏப்ரல் 1 (புதன்கிழமை) - திருச்சி மற்றும் கரூர்:
காலை 9 மணி (திருச்சி உழவர் சந்தை): கே.என். நேரு (திருச்சி மேற்கு), அன்பில் மகேஷ் பொய்யாமொழி (திருவெறும்பூர்), அப்துல் சமது (மணப்பாறை - மமக) உள்ளிட்ட 9 வேட்பாளர்களை ஆதரித்துப் பிரசாரம் செய்கிறார்.
மாலை 5 மணி (கரூர் ராயனூர்): செந்தில் பாலாஜிக்குப் பதில் அறிவிக்கப்பட்டுள்ள ஆ.சி.எம். தியாகராஜன் (கரூர்), இளங்கோ (அரவக்குறிச்சி) உள்ளிட்ட 4 வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கிறார்.
ஏப்ரல் 2 (வியாழக்கிழமை) - ஈரோடு மற்றும் கோவை:
காலை 9 மணி (ஈரோடு சித்தோடு): முத்துசாமி (ஈரோடு மேற்கு), தோப்பு வெங்கடாச்சலம் (பெருந்துறை) உள்ளிட்ட 7 வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார்.

மாலை 5 மணி (கோவை கொடிசியா மைதானம்): செந்தில் பாலாஜி (கோவை தெற்கு), தளபதி முருகேசன் (சூலூர்) உள்ளிட்ட 7 வேட்பாளர்களுக்காகப் பிரசாரம் மேற்கொள்கிறார்.
முதலமைச்சரின் பயணத் திட்டம் மிகத் துல்லியமாகத் திட்டமிடப்பட்டுள்ளதால், கால நேரத்தைக் கருத்தில் கொண்டு தொண்டர்கள் வழியில் எவ்வித வரவேற்பு நிகழ்ச்சிகளோ அல்லது இதர கூட்டங்களோ ஏற்பாடு செய்யக்கூடாது என திமுக தலைமை அறிவுறுத்தியுள்ளது. குறித்த நேரத்திற்குள் பொதுக்கூட்ட மேடைக்கு முதலமைச்சர் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் எனத் தொண்டர்களுக்குக் கட்டளையிடப்பட்டுள்ளது.
