சென்னையில் எம்எல்ஏக்கள் விடுதியில் நவீன உடற்பயிற்சி கூடம்...சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் அறிவிப்பு!

 
சபாநாயகர்

சென்னையில் உள்ள எம்எல்ஏக்கள் விடுதியில் புதிய உடற்பயிற்சி கூடம் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அதனை அவர்கள் பயன்படுத்தித் தங்கள் உடல்நலத்தைப் பேணிக் கொள்ள வேண்டும் என்றும் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் இன்று விளையாட்டுத்துறை சார்ந்த கோரிக்கைகள் மீது அமைச்சர் ஆதவ் பதிலளித்துப் பேசினார்.

எம்எல்ஏக்களுக்கு உடற்பயிற்சி கூடம் - சபாநாயகர் ஜேசிடி பிரபாகர்

இதனைத் தொடர்ந்து பேசிய சபாநாயகர், சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது தொகுதியை கவனிப்பது போலத் தங்களது உடல் நலத்திலும் மிகுந்த அக்கறை கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார். மேலும், எம்எல்ஏக்கள் விடுதியில் இதற்காக நவீன உபகரணங்கள் நிறுவப்பட்டுள்ளதாகவும் அவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

ஆதவ் அர்ஜுனா

மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் தங்களது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ள இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. சபாநாயகரின் இந்த அறிவிப்பு சட்டப்பேரவை உறுப்பினர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.