ஜெம் வீரமணிக்கு சொந்தமான இடங்களில் விடிய விடிய சோதனை - செல்போன்கள், டிஜிட்டல் ஆவணங்கள் பறிமுதல்!

 
ஜெம் வீரமணி

தொழிலதிபர் ஜெம் கிரானைட்ஸ் வீரமணிக்குச் சொந்தமான பல்வேறு இடங்களில் காவல்துறையினர் விடிய விடிய நடத்திய தீவிர சோதனையில் ஏராளமான முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளன.

ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் வீரமணிக்குத் தொடர்புடைய 5 வெவ்வேறு இடங்களில் காவல்துறையினர் அதிரடிச் சோதனையை மேற்கொண்டனர். இந்தச் சோதனை நள்ளிரவு முழுவதும் விடிய விடிய நீடித்தது.

ஜெம் வீரமணி

காவல்துறையினர் நடத்திய இந்தப் அதிரடி சோதனையின் போது, பல்வேறு முக்கிய ஆவணங்களுடன் பல செல்போன்கள் மற்றும் பலவேறு டிஜிட்டல் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக வீரமணிக்கு உடந்தையாகச் செயல்பட்டதாகக் கூறப்படும் சாந்தி, மகேந்திர சிம்ஹன் மற்றும் ஆபாச வீடியோக்களைத் தனது செல்போனில் வைத்திருந்ததாகக் கூறப்படும் கணேசன் உள்ளிட்ட 4 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள நபர்களிடம் காவல்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.