குடை எடுத்திட்டு போங்க... தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

 
school rain

 தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே வெயில் கொளுத்தி வருகிறது.  ஜூன் மாதம் வரை வெயிலின் தாக்கம் நீடிக்கும் . பகல் நேரங்களில் வீட்டை விட்டு வெளியில் வரவேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் இன்று தமிழகத்தின் சில பகுதிகளில் வெப்பச்சலனம் காரணமாக  லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.

வெயில் மழை

வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். நாளை முதல் ஏப்ரல்1ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.2,3ம் தேதிகளில் தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம்.  

மழை

வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில்  இன்று முதல் ஏப்ரல்1ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில்  2 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயரக்கூடும்.  சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலையாக 34-35 டிகிரி செல்சியசும்,  குறைந்தபட்ச வெப்பநிலையாக 25-26 டிகிரி செல்சியசும் நிலவக்கூடும் எனக்  குறிப்பிடப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web