தமிழகத்தின் பல பகுதிகளில் இன்று மழை!

 
வெயில் மழை

  தமிழகத்தில் வெயில் நாளுக்கு நாள் கொளுத்தி வருகிறது. பங்குனியிலேயே  பல்லைக் காட்டும் வெயில் சித்திரை மாதத்தில் என்ன வறுத்தெடுக்கப் போகிறதோ தெரியவில்லை என்ற சாமானியர்களின் அங்கலாய்ப்பு இப்போதே கேட்க தொடங்கி விட்டது. தமிழகத்தின் பல பகுதிகளில் வெயில் 100 சதவீதத்தை தாண்டியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது . வயதானவர்கள், குழந்தைகள், இணை நோய் இருப்பவர்கள் 10 முதல் 4 மணி வரை வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது . அந்த வகையில் நேற்று மார்ச் 31ம் தேதி ஈரோடு, நீலகிரி, கரூர், கடலூர், தர்மபுரி,  சேலம், திருவள்ளூர், ராமநாதபுரம் மாவட்டங்களில் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் வரையும், தஞ்சாவூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் இயல்பைவிட 4 டிகிரி செல்சியஸ் வரையும் வெப்பநிலை அதிகரித்து காணப்பட்டது.

வெயில் , மழை


 தென்னிந்தியப் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் நிலவி வருகிறது. இதனையடுத்து இன்று ஓரிரு இடங்களில் வெப்பச்சலன மழை ஏற்படலாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும். ஏப்ரல் 3ம் தேதியும் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும் வாய்ப்புள்ளது.

இடி மின்னல் மழை
உள் தமிழகத்தில் பொதுவாக பல பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும். 4ம் தேதி முதல் 6ம் தேதி வரை இதே நிலை தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  சென்னையை பொறுத்தவரை  வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். வெப்பநிலை 100 டிகிரியை ஒட்டியே இருக்கும். இதனால் அவசிய காரணங்களின்றி 11 மணி முதல் 3 மணி வரை வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web