மதுரை உட்பட 15 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு!
சிவகங்கை, புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும். நாகை, தஞ்சாவூர், திருவாரூர், நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர் மற்றும் அரியலூர் ஆகிய மாவட்டங்களிலும் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்றுடன் மழை பெய்யும்.

வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி மேற்கண்ட மாவட்டங்களில் இன்று சீதோண நிலை சற்று மாறுபட்டு காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவசியமின்றி வெளியே செல்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மேலும், தமிழகத்தின் பிற பகுதிகள் மற்றும் புதுவை மாநிலத்திலும் கூட ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. விவசாயிகளும் பொதுமக்களும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
