இன்று 3 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

 
வெயில் மழை வெயில் மழை

தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், வெப்பத்தைப் தணிக்கும் விதமாக இன்று சில மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளது. அதன்படி, இன்று ஏப்ரல் 24 ம் தேதி  தமிழகத்தின் 3 முக்கிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இந்தத் திடீர் மழை மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக வானிலை நிபுணர்கள் கணித்துள்ளனர்.

மழை

மழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்களின் பட்டியலில் தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய டெல்டா மாவட்டங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த மாவட்டங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய சாரல் மழை பெய்யக்கூடும் என்பதால், அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் சற்று நிம்மதியடைந்துள்ளனர். கடந்த சில நாட்களாகவே இந்தப் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், தற்போது மழையின் வருகை வெப்பத்தைத் தணிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பனி, மழை

அதே நேரத்தில், சென்னை உட்பட  புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், மற்ற மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களிலும், தென்தமிழகக் கடலோரப் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும் என்பதால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். வெயிலின் தாக்கம் ஓரளவு குறைந்தாலும், ஈரப்பதம் காரணமாக நிலவும் அசௌகரியத்தைத் தவிர்க்க மக்கள் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.