பிளஸ் 1 மாணவர்களுக்கு புதிய வசதிகளுடன் கூடிய நவீன இலவச சைக்கிள் வழங்கும் திட்டம்!

 
சைக்கிள்

பள்ளி மாணவர்களின் பாதுகாப்பான மற்றும் எளிமையான பயணத்தை உறுதி செய்யும் வகையில், தமிழக அரசின் பள்ளிக்கல்வித் துறை சார்பில் புதிய அதிநவீன வசதிகளுடன் கூடிய இலவச சைக்கிள்கள் வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இதுவரை வழங்கப்பட்டு வந்த பாரம்பரிய சைக்கிள்களுக்கு மாற்றாக, எடைக் குறைவான மற்றும் உறுதியான பிரேம்களுடன் கூடிய புதிய வடிவமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சைக்கிள்

இரவிலும் போதிய வெளிச்சமில்லாத நேரங்களிலும் மாணவர்கள் பாதுகாப்பாகப் பயணிக்க ஏதுவாக முன் மற்றும் பின் பகுதிகளில் பிரதிபலிப்பான் ஸ்டிக்கர்கள், மேம்படுத்தப்பட்ட பிரேக்கிங் சிஸ்டம் மற்றும் பள்ளிப் பைகளை எளிதாக எடுத்துச் செல்லக்கூடிய விரிவுபடுத்தப்பட்ட கேரியர் போன்ற வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.

கிராமப்புற மற்றும் நகர்ப்புற மாணவர்களின் கல்வி இடைநிற்றலைக் குறைக்கும் நோக்கில் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தின் மூலம் நடப்பு கல்வியாண்டில் சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பிளஸ் 1 மாணவ, மாணவிகள் பயனடைய உள்ளனர். தகுதியான மாணவர்களின் பட்டியலைச் சரிபார்க்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருவதோடு, விரைவில் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மூலம் இவை மாணவர்களுக்கு அதிகாரப்பூர்வமாக விநியோகம் செய்யப்படவுள்ளது.