’மோடி கடவுள் இல்லை’.. சட்டமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் பரபரப்பு பேச்சு!
டெல்லி முதல்வர் பதவியை ராஜினாமா செய்த பிறகு முதல் முறையாக டெல்லி சட்டசபையில் அரவிந்த் கெஜ்ரிவால் பேசினார்; "பிரதமர் மோடி சக்தி வாய்ந்தவர் மற்றும் நிறைய வளங்களைக் கொண்டவர். ஆனால் அவர் கடவுள் அல்ல என கூறினார். கடவுள் அல்லது பிரபஞ்சத்தில் உள்ள சில வகையான ஆற்றல் நமக்கு உதவுகிறது.
கடவுள் நம்மோடு இருக்கிறார். உச்ச நீதிமன்றத்திற்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். என்னையும், மணீஷ் சிசோடியாவையும் இங்கே பார்த்து எதிர்க்கட்சியில் உள்ள எனது சகாக்கள் வருத்தப்படுவார்கள். எனக்கு பதவி ஆசை இல்லை, 3 முறை ராஜினாமா செய்துள்ளேன். என்னை சிறைக்கு அனுப்பிவிட்டு டெல்லியில் என் வேலையை நிறுத்திவிட்டார்கள்.
இது மட்டுமே அவர்களின் நோக்கம். இன்று நான் முதல்வர் ஆதிஷியுடன் டெல்லி பல்கலைக்கழக சாலையை ஆய்வு செய்தேன். விரைவில் சாலைகள் சீரமைக்கப்படும். டெல்லியில் உள்ள மற்ற சாலைகளும் விரைவில் சீரமைக்கப்படும். டெல்லி மக்கள் கவலைப்படத் தேவையில்லை,'' என்றார்.
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!