“Is it okay?”... ஜின்பிங்கை பார்த்ததும் பேச்சை நிறுத்திய மோடி! BRICS மாநாட்டில் நடந்தது என்ன? வைரல் வீடியோ!

 
மோடி

 

புதுடெல்லியில் நடைபெறும் BRICS உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றிக் கொண்டிருந்தபோது, சீன அதிபர் ஜின்பிங் அசௌகரியமாக இருப்பதை கவனித்ததாகவும், இதையடுத்து மோடி தனது உரையை சிறிது நேரம் நிறுத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.ஜின்பிங்கை பார்த்த பிரதமர் மோடி, “Is it okay?” என கேட்டதாக Times of India செய்தி தெரிவிக்கிறது. இந்த சம்பவம் BRICS மாநாட்டின் முக்கிய கவன ஈர்ப்பாக மாறியுள்ளது.

இதற்கிடையே மோடி மற்றும் ஜின்பிங் இருதரப்பு பேச்சுவார்த்தையும் நடத்தினர். இந்தியா–சீனா உறவின் முன்னேற்றம், எல்லைப் பிரச்சினை, வர்த்தகம் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசித்தனர். இருதரப்பு உறவில் “பரஸ்பர மரியாதை, பரஸ்பர உணர்திறன், பரஸ்பர நலன்” ஆகிய மூன்று அம்சங்கள் முக்கியம் என மோடி வலியுறுத்தியுள்ளார்.

பிரிக்ஸ் மோடி புதின் சீனா

ஆனால், இதற்குப் பிறகு பிரதமர் மோடி ஏற்பாடு செய்த BRICS தலைவர்களுக்கான சிறப்பு இரவு விருந்தில் ஜின்பிங் பங்கேற்கவில்லை. அவர் ஏன் விருந்தில் கலந்து கொள்ளவில்லை என்பதற்கு அதிகாரப்பூர்வ காரணம் வெளியாகவில்லை. எனவே, இதை இரு நாடுகளுக்கு இடையிலான கருத்து வேறுபாட்டுடன் நேரடியாக தொடர்புபடுத்துவது சரியாக இருக்காது.