“வேறுபாடுகள் மோதலாக மாறக்கூடாது”... மோடி–ஜின்பிங் பேச்சு... எல்லை விவகாரத்தில் முக்கிய முடிவு!
பிரிக்ஸ் மாநாட்டையொட்டி பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் இந்தியா–சீனா உறவு, எல்லை விவகாரம், வர்த்தகம் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டன.
Modi and Xi hold talks: ‘Partners not rivals, committed to resolution of boundary question’https://t.co/4mvWPtp33T
— India in Zambia (@indiainzambia) September 13, 2026
via NaMo App pic.twitter.com/0GDDvprWlh
கிழக்கு லடாக் எல்லையில் ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் பதற்றம் நீடித்து வந்தது. தற்போது எல்லையில் அமைதியும் ஸ்திரத்தன்மையும் தொடர்வது மிகவும் முக்கியம் என்று பிரதமர் மோடி வலியுறுத்தினார்.மேலும், இந்தியா–சீனா இடையிலான வேறுபாடுகள் மோதலாக மாறக்கூடாது என்றும், இரு நாடுகளும் பரஸ்பர நம்பிக்கையுடன் உறவை மேம்படுத்த வேண்டும் என்றும் மோடி தெரிவித்தார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவை மேம்படுத்துவது குறித்தும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. விமான சேவைகள், விசா நடைமுறைகள் மற்றும் கைலாஷ் மானசரோவர் யாத்திரை உள்ளிட்ட விவகாரங்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களும் இந்த சந்திப்பின் பின்னணியில் முக்கியத்துவம் பெற்றுள்ளன.இந்த சந்திப்பு இந்தியா–சீனா உறவில் புதிய முன்னேற்றத்திற்கு வழிவகுக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
