இந்தோனேசியா சென்ற பிரதமர் மோடி குறித்துக் காங்கிரஸ் சர்ச்சைப் பதிவு; நாடு முழுவதும் எழுந்த பலத்த எதிர்ப்பால் பதிவை நீக்கி ஓட்டம்!

 
காங்கிரஸ்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இந்தோனேசியா நாட்டுக்கான அதிகாரப்பூர்வப் பயணத்தின் போது, அந்நாட்டு நாடாளுமன்றச் சபாநாயகர் புவான் மகாராணி என்ற பெண்மணியின் அருகில் அவர் அமர்ந்திருந்த ஒரு சாதாரண வீடியோ காட்சியை மராட்டிய மாநிலக் காங்கிரஸ் தங்களின் எக்ஸ் (X) வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

அந்தப் பதிவிற்குப் பின்னணியாக ஒரு ஹிந்தித் திரைப்படத்தின் மலிவான நையாண்டி வாசகத்தைக் குறிப்பிட்டுப் பிரதமரைத் தவறான கண்ணோட்டத்தில் விமர்சித்துள்ளது. ஒரு நாட்டின் பிரதமரையும், அண்டை நாட்டின் உயரிய பெண் அரசியல் தலைவரையும் கொச்சைப்படுத்தும் விதமாகப் பகிரப்பட்ட இந்த விறுவிறுப்பான பதிவு இணையத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

காங்கிரஸின் இந்தச் மலிவான அரசியல் நடவடிக்கைக்கு எதிராகப் பாரதிய ஜனதா கட்சியின் மராட்டிய மாநிலப் பிரிவு தங்களின் கடுமையான கண்டனங்களை உடனடியாகப் பதிவு செய்துள்ளது. நாட்டின் 140 கோடி இந்தியப் பிரதிநிதியாகப் வெளிநாடு சென்றுள்ள பிரதமரையும், அவருக்கு உயரிய சிவிலியன் விருது வழங்கி கௌரவித்த ஒரு நாட்டின் பெண் தலைவரையும் இழிவுபடுத்தும் வகையில் இந்த வீடியோ எடிட் செய்யப்பட்டுள்ளதாகப் பாஜக குற்றம் சாட்டியுள்ளது.

ஏழை எளிய நடுத்தரக் குடும்பத்தில் இருந்து வந்து 3 வது முறையாகப் பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள நரேந்திர மோடி மீதுள்ள தனிப்பட்ட வெறுப்பால் காங்கிரஸ் தங்களின் அநாகரிகமான பெண் எதிர்ப்புச் சிந்தனையை வெளிப்படுத்தியுள்ளதாகப் பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர்கள் சாடியுள்ளனர்.

இந்த விவகாரத்தில் காங்கிரஸின் கூட்டணி கட்சியைச் சேர்ந்த சிவசேனா (யுபிடி) பெண் தலைவர் பிரியங்கா சதுர்வேதி கூட காங்கிரஸின் அதிகாரப்பூர்வப் பக்கத்திற்குத் தனது பலத்த கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். அரசியல் எதிரிகளை வீழ்த்துவதற்காகப் பெண்களை வெறும் காட்சிப் பொருளாகப் பயன்படுத்துவதை நிறுத்திக் கொள்ளுமாறு அவர் காங்கிரஸுக்குத் திட்டவட்டமாக அறிவுறுத்தியுள்ளார்.

இவ்வாறு தங்களின் சொந்தக் கூட்டணியிலும், நாடு முழுவதிலும் இருந்து எழுந்த  சமூக வலைத்தளப் பொதுமக்களின் எதிர்ப்பைக் கண்டு அஞ்சிய மராட்டியக் காங்கிரஸ், தங்களின் அந்தச் சர்ச்சைக்குரிய எக்ஸ் (X) பதிவை  அவசர அவசரமாக நீக்கிவிட்டுத் தப்பியோடியுள்ளது.