அமைச்சர் ராஜ்மோகன் பேச்சுக்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு - மோகன் குமாரமங்கலம் பதிலடி!

 
ராஜ்மோகன்  மோகன் குமாரமங்கலம்

தேர்தல் ஆணையர் மற்றும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான அமைச்சர் ராஜ்மோகனின் விமர்ச்சனத்திற்குக் காங்கிரஸ் கட்சி தரப்பில் இருந்து கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் SIR நடைமுறை ஒரு மிகப்பெரிய மோசடி என்றும், தேர்தல் ஆணையரை மாற்றுவது போன்ற கோரிக்கைகள் திசைதிருப்பும் செயல் என்றும் தவெக அமைச்சர் ராஜ்மோகன் விமர்சித்திருந்தார்.

ஞானேஷ்குமார்

அமைச்சரின் இந்தப் பேச்சுக்குக் காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் மோகன் குமாரமங்கலம் தனது எக்ஸ் தளத்தில் பதிலடி கொடுத்துள்ளார். அதில், "வாயைத் திறந்து உங்கள் அறியாமையை வெளிப்படுத்துவதை விட அமைதியாக இருப்பதே சிறந்தது" என்று அவர் கடுமையாகச் சாடியுள்ளார். அமைச்சரின் இந்தப் பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பையும், விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.