"அம்மா கூப்பிடுறாங்க... வா சாகலாம்" - மனைவியைக் கொன்று வாலிபர் தற்கொலை!

 
தற்கொலை

திருப்பதியில் தாய் இறந்த துக்கம் தாங்காமல், மனைவியைக் கொலை செய்துவிட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சோக சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்த லட்சுமண் ராவ் (32) மற்றும் சியாமளா (30) தம்பதியர் மாற்றுத்திறனாளிகள். திருமணத்திற்குப் பிறகு இவர்கள் இருவரும் திருப்பதியில் வசித்து வந்தனர். சமீபத்தில் லட்சுமண் ராவின் தாய் திடீரென மரணமடைந்தார். தாய் மீது மிகுந்த பாசம் வைத்திருந்த அவர், தாயின் பிரிவைத் தாங்க முடியாமல் கடும் மன உளைச்சலில் இருந்துள்ளார்.

தற்கொலை

"அம்மா அடிக்கடி என் கனவில் வந்து தன்னைத் தன் அருகிலேயே வருமாறு அழைக்கிறார்" என லட்சுமண் ராவ் தனது மனைவியிடம் கூறிப் புலம்பி வந்துள்ளார். "நாம் இருவரும் தற்கொலை செய்து கொண்டு அம்மாவிடமே சென்று விடுவோம்" என லட்சுமண் ராவ் கூறியபோது, மனைவி சியாமளா அதற்குச் சம்மதிக்காமல் தடுத்துள்ளார்.

இந்நிலையில் அடுத்த நாள் கதவு நீண்ட நேரம் பூட்டப்பட்டிருந்ததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில், காவல்துறையினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது கணவன் - மனைவி இருவரும் சடலமாக கண்டெடுக்கப்பட்டனர்.

பள்ளி மானவி தற்கொலை

காவல்துறையினர் நடத்திய சோதனையில் லட்சுமண் ராவின் செல்போனில் பதிவாகியிருந்த 'செல்ஃபி' வீடியோ ஒன்று சிக்கியது. அதில், தாய் இறந்த துக்கம் தாங்காமல், தற்கொலைக்குச் சம்மதிக்காத மனைவியைக் கொலை செய்துவிட்டுத் தானும் தற்கொலை செய்து கொள்வதாக அவர் உருக்கமாகப் பேசியிருந்தது தெரிய வந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.