துப்பாக்கி சுடுதலில் உலக சாதனை: மோனா அகர்வாலுக்கு 2-வது தங்கம்

 
மோனோ அகர்வால்

 

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மோனா அகர்வால், உலக சாதனையுடன் தனது இரண்டாவது தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.ஜப்பானின் அயிச்சி-நகோயாவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மகளிர் 50 மீட்டர் ரைஃபிள் 3 பொசிஷன்ஸ் எஸ்எச்1 பிரிவில் மோனா 357.5 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்தார்.

இதன் மூலம் ஸ்வீடன் வீராங்கனை அன்னா பென்சன் 356 புள்ளிகளுடன் வைத்திருந்த உலக சாதனையை முறியடித்தார். ஆசிய சாதனையையும் அவர் புதுப்பித்தார்.சீனாவின் ஜாங் குய்பிங் 353.7 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கமும், தென் கொரியாவின் கிம் மியோங் 344.4 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கமும் வென்றனர். இந்தியாவின் அவனி லெகாரா 333.2 புள்ளிகளுடன் நான்காவது இடத்தைப் பிடித்தார்.

உலக பாரா துப்பாக்கி சுடுதல்: இந்திய மகளிா் அணிக்கு தங்கம்

இதற்கு முன்பு மகளிர் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் ஸ்டாண்டிங் எஸ்எச்1 பிரிவிலும் மோனா தங்கம் வென்றிருந்தார். இதன்மூலம் நடப்பு ஆசிய பாரா விளையாட்டில் அவர் இரண்டு தங்கப் பதக்கங்களைப் பெற்றுள்ளார்.