பாலிவுட்டில் அறிமுகமாகிறார் கும்பமேளாவைக் கலக்கிய மோனலிசா!

உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் உலகின் மிகப் பெரிய ஆன்மிகத் திருவிழாவான மகா கும்பமேளாவில் உலகம் முழுவதும் இருந்தும் கோடிக்கணக்கான பக்தர்கள் குவிந்து, புனித கங்கையில் நீராடிச் செல்கின்றனர்.
இந்நிலையில் நர்மதா நதிக்கரையில் உள்ள கிலா காட் பகுதியில் பல ஆண்டுகளாக பூக்கள் மற்றும் பாசி, ருத்ராட்ச மாலைகளை விற்று வரும் மோனலிசா போஸ்லே எனும் இளம்பெண்ணின் புகைப்படத்தை இன்ஸ்டா பிரபலம் ஒருவர் தன்னுடய பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
சமூக வலைத்தளங்களில் மோனலிசாவின் புகைப்படம் தீயாய் பரவ, அடுத்தடுத்து நெட்டிசன்கள் மோனலிசாவைக் கொண்டாட துவங்கினர்.
மத்தியப் பிரதேசத்தின் கார்கோன் மாவட்டத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமியான மோனலிசா போஸ்லேவுக்கு நெட்டிசன்களிடையே வரவேற்பும், ஆதரவும் பெருக புகழ் வெளிச்சம் பரவ தொடங்கியதில் மீடியாக்கள் மோனலிசா செல்லும் இடங்களில் எல்லாம் லைவ் கவரேஜ் கேட்டு மொய்க்கத் தொடங்கினர்.
இந்த கும்பமேளாவை முன்னிட்டு நிறைய தொகை கடன் வாங்கி, முதலீடு செய்து தாங்கள் வியாபாரத்திற்காக குவிந்த நிலையில், தற்போது மோனலிசாவால் வியாபாரம் செய்ய இயலவில்லை என்று அவரின் உறவினர்கள் தங்களது ஆதங்கத்தைத் தெரிவித்திருந்தனர். தேசிய தொலைக்காட்சி சேனல்கள் முதல் திடீர் இன்ஸ்டா, யூ-ட்யூப் சேனல்கள் வரை மோனிஷாவை முக்கியச் செய்தியாக்கி வந்தனர்.
கவர்ந்திழுக்கும் அழகிய கண்களுக்கு சொந்தக்காரரான மோனலிசாவை நிச்சயம் திரையுலகம் ரத்தின கம்பளம் விரித்து வரவேற்கும் என்று பலரும் கருத்து கூறி வந்த நிலையில் தற்போது அவர் இந்தி திரையுலகில் அறிமுகமாவது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது.
'தி டைரி ஆஃப் மணிப்பூர்' என்ற படத்தில் மோனலிசா நடிக்க இருப்பதாக படத்தின் எழுத்தாளரும் திரைப்பட இயக்குநருமான சனோஜ் மிஸ்ரா தெரிவித்துள்ளார். இவர் இதற்கு முன்னதாக 'தி டைரி ஆஃப் வெஸ்ட் பெங்கால்' போன்ற படங்களை இயக்கியுள்ளார்.
மோனலிசாவைச் சந்தித்து அவருடனான படங்களை இயக்குநர் சனோஜ் மிஸ்ரா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
மோனலிசா போஸ்லே கார்கோன் மாவட்டத்தின் மகேஷ்வரில் வசித்து வருகிறார். அவர் நடிக்கவிருக்கும் படமான தி டைரி ஆஃப் மணிப்பூரின் படப்பிடிப்பு பிப்ரவரியில் தொடங்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!