பணமழை ரீல்ஸ்.. 118 சவரன் பறிகொடுத்த மதுமிதா, பாலியல் வழக்கில் கைதானவர்: குமரியில் அதிர்ச்சித் தகவல்!
கிலோ கணக்கில் நகைகள் மற்றும் பணமழை பொழிவது போல் ரீல்ஸ் வெளியிட்டு, 118 பவுன் நகைகளைக் கொள்ளையர்களிடம் பறிகொடுத்த பிரபல பெண் யூடியூபர் குறித்த அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல பெண் யூடியூபர் ஒருவர் வீட்டில் 118 பவுன் நகைகளைக் கொள்ளையர்கள் திருடிச் சென்றனர். இந்தச் சம்பவத்திற்குப் பிறகும் அவர் வழக்கம் போல் பணத்தை வைத்து அதிகளவில் ரீல்ஸ்களை வெளியிட்டு வந்ததால், அவரது பின்தொடர்பாளர்கள் எண்ணிக்கை 5 லட்சத்தை நெருங்கியுள்ளது.
கொள்ளையில் ஈடுபட்ட நபர்களைக் கைது செய்து நகைகளை மீட்டுள்ள காவல்துறையினர், புகார் அளிக்கப்பட்ட அளவை விடக் கைப்பற்றப்பட்ட நகைகளின் அளவு குறைவாக இருப்பதால் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அந்தப் பெண் யூடியூபர் ஏற்கனவே நாகர்கோவில் வடசேரி பகுதியில் அனுமதியின்றி இயங்கிய ஸ்பாவில் பாலியல் வழக்கில் கைதாகி காப்பகத்தில் அடைக்கப்பட்டவர் என்ற தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், கோயில்களில் வீடியோ எடுத்துச் சர்ச்சையில் சிக்கியவர் என்பதும் தெரியவந்துள்ளது.

கோவை நகரைச் சேர்ந்தவர் என்று கூறிவந்த இவர் உண்மையில் குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதும், இவரிடம் கட்டுக்கட்டாகப் பணமும், பெருமளவில் நகைகளும் வந்தது எப்படி என்பது குறித்தும் வருமான வரித்துறை அதிகாரிகள் தனியாக விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
