பருவமழை முன்னெச்சரிக்கை... சென்னையில் 15 மண்டலங்களுக்கும் 7 பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்!
சென்னை மாநகராட்சியில் பருவமழை முன்னெச்சரிக்கை மற்றும் வளர்ச்சிப் பணிகளைத் துரிதப்படுத்தவும், அவசரகால நிவாரணப் பணிகளை மேற்பார்வையிடவும் 15 மண்டலங்களுக்கு 7 அமைச்சர்களைப் பொறுப்பு அமைச்சர்களாக நியமித்துத் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
மண்டல வாரியாக நியமிக்கப்பட்டுள்ள பொறுப்பு அமைச்சர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, திருவொற்றியூர் (மண்டலம் 1) & மணலி (மண்டலம் 2) பொறுப்பு அமைச்சர்: ரமேஷ் (இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை)

மாதவரம் (மண்டலம் 3) & தண்டையார்பேட்டை (மண்டலம் 4) பொறுப்பு அமைச்சர்: த. லோகேஷ் தமிழ்ச்செல்வன் (வணிகவரி மற்றும் பதிவுத் துறை)
ராயபுரம் (மண்டலம் 5) & திரு.வி.க. நகர் (மண்டலம் 6): பொறுப்பு அமைச்சர்: டாக்டர் K.G. அருண்ராஜ் (மருத்துவம் மற்றும் குடும்ப நலத் துறை)
அம்பத்தூர் (மண்டலம் 7), அண்ணா நகர் (மண்டலம் 8) & தேனாம்பேட்டை (மண்டலம் 9): பொறுப்பு அமைச்சர்: ம. விஜய் பாலாஜி (கைத்தறி, துணிநூல் மற்றும் காதித் துறை)
கோடம்பாக்கம் (மண்டலம் 10) & வளசரவாக்கம் (மண்டலம் 11): பொறுப்பு அமைச்சர்: டாக்டர் டி.கே. பிரபு (இயற்கை வளங்கள் துறை)

ஆலந்தூர் (மண்டலம் 12) & அடையாறு (மண்டலம் 13): பொறுப்பு அமைச்சர்: ஆ. விஜய் தமிழன் பார்த்திபன் (போக்குவரத்துத் துறை)
பெருங்குடி (மண்டலம் 14) & சோழிங்கநல்லூர் (மண்டலம் 15) பொறுப்பு அமைச்சர்: க. விக்னேஷ் (மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை)
ஏற்கனவே 15 மண்டலங்களுக்கும் தனித்தனியாக ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அடிப்படைப் பணிகள் மற்றும் பருவமழை முன்னெச்சரிக்கைகளை ஒருங்கிணைக்க இந்த 7 அமைச்சர்களும் பொறுப்பு வகிப்பார்கள்.
