இந்திய வானில் மறையும் மழை மேகங்கள்... வானிலை மையம் அதிர்ச்சி தகவல்!

 
இந்தியா

இந்தியாவில் தென்மேற்குப் பருவமழை தொடங்கியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருந்தாலும், நாட்டின் பல பகுதிகளில் எதிர்பார்த்த அளவில் மழை பெய்யாதது கவலையை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமாக இந்த காலகட்டத்தில் வானில் திரண்டு காணப்படும் அடர்ந்த மழை மேகங்கள் தற்போது இல்லாதது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் மழைப் பற்றாக்குறை நிலவி வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அண்மையில் எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் படங்களின்படி, இந்தியாவின் மத்திய, மேற்கு மற்றும் வடமேற்குப் பகுதிகள் மேகங்கள் ஏதுமின்றி வறண்ட நிலையில் காணப்படுவது பதிவாகியுள்ளது. பருவமழையின் நகர்வு மிகவும் மந்தமாக இருப்பதே இதற்கு முக்கியக் காரணம் என்று வானிலை ஆய்வாளர்கள் விளக்கியுள்ளனர். இந்த மாறுபட்ட சூழலால் நாட்டின் முக்கியப் பகுதிகளில் வெப்பத்தின் தாக்கம் குறையாமல் நீடித்து வருகிறது.

Here is why Rain-bearing Clouds have been thinning out across India in last 50 Years!

பருவமழை போதிய வேகத்தில் முன்னேறாத காரணத்தால், ஜூன் 4 முதல் ஜூன் 26 வரை இந்தியா முழுவதும் சராசரியாக 45 சதவீத மழைப் பற்றாக்குறை பதிவாகியுள்ளது. இந்த நிலை தொடர்ந்தால் விவசாயப் பணிகள், குடிநீர் ஆதாரங்கள் மற்றும் அணைகளின் நீர்மட்டம் ஆகியவை பெருமளவில் பாதிக்கப்படும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். நிலைமையைக் கண்காணித்து வரும் வானிலை மையம் அடுத்த சில நாட்களில் பருவமழை தீவிரமடைய வாய்ப்புள்ளதா என்று ஆய்வு செய்து வருகிறது.