18 வயசுக்கு மேல் அனைத்து பெண்களுக்கும் மாதந்தோறும் ரூ.1000/- கெஜ்ரிவால் தேர்தல் வாக்குறுதி!

18 வயசுக்கு மேல் அனைத்து பெண்களுக்கும் மாதந்தோறும் ரூ.1000/- கெஜ்ரிவால் தேர்தல் வாக்குறுதி!

உத்தர பிரதேசம், பஞ்சாப், கோவா, உத்தரகாண்ட், திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற இருக்கிறது. பாஜக, காங்கிரஸ் கட்சிகளை எதிர்த்து களம் கண்டு, டெல்லியில் ஆட்சியையும் பிடித்துள்ள ஆம் ஆத்மி கட்சி அடுத்ததாக உத்தரகாண்ட், பஞ்சாப் மாநிலத்திலும் வலுவாக காலூன்ற விரும்புகிறது.

18 வயசுக்கு மேல் அனைத்து பெண்களுக்கும் மாதந்தோறும் ரூ.1000/- கெஜ்ரிவால் தேர்தல் வாக்குறுதி!

வரும் 2022ம் வருடம் உத்தரபிரதேசம், பஞ்சாப், கோவா, உத்தரகாண்ட், திரிபுரா மாநிலங்களில் தேர்தல் நடைபெற இருக்கிறது. இத்தனை மாதங்களாக விவசாயிகளின் போராட்டத்தை, 600க்கும் மேற்பட்ட விவசாயிகளின் உயிரையும் காவு வாங்கிய பிறகும், வேளாண் சட்டங்களைத் திரும்ப பெறாத பிரதமர், இப்போது வாபஸ் பெற்றதற்கும் வரவிருக்கும் தேர்தல் தான் காரணம் என்கிறார்கள்.

18 வயசுக்கு மேல் அனைத்து பெண்களுக்கும் மாதந்தோறும் ரூ.1000/- கெஜ்ரிவால் தேர்தல் வாக்குறுதி!

இந்நிலையில், இன்று பஞ்சாப் மாநிலத்தில் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், வரும் 2022ம் ஆண்டு பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி ஆட்சி அமைத்தால், பஞ்சாப் முழுவதும் உள்ள 18 வயதிற்கு மேற்பட்ட அனைத்து பெண்களுக்கும் மாதந்தோறும் தலா ஆயிரம் ரூபாய் மாதந்தோறும் வழங்கப்படும் என்ரு தெரிவித்தார். ஒரே குடும்பத்தில் மூன்றுக்கும் மேற்பட்ட பெண்கள் 18 வயதைக் கடந்திருந்தாலும், அவர்கள் குடும்பத்திற்கு ஆளுக்கு 1000 ரூபாய் வீதம், மாதந்தோறும் 3 ஆயிரம் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

From around the web