தமிழகம் முழுவதும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்டதும் மாதாந்திர மின் கணக்கீடு... அமைச்சர் செந்தில் பாலாஜி!

 
செந்தில் பாலாஜி


தமிழகத்தின் தலைநகர் சென்னை அண்ணாசாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் கோடைகாலத்தில் தடையின்றி மின்சாரம் வழங்குவது குறித்த  ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில்    மின்வாரியத்தின் அனைத்து மண்டல தலைமைப் பொறியாளர்கள், மேற்பார்வைப் பொறியாளர்கள் கலந்து கொண்டனர். அவர்கள்  தங்களது மின்வட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து விரிவான தொடர்பாக விளக்கம் அளித்தனர்.

செந்தில் பாலாஜி

இது குறித்து   மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கோடைக்காலத்தில் தடையற்ற மின் விநியோகம் வழங்குவது குறித்து இன்றைய கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. 6,534 புதிய மின்மாற்றிகளை மாற்ற திட்டமிடப்பட்டு, அவற்றில் 5,407 மின் மாற்றிகள் மாற்றப்பட்டுள்ளன.
புதிய மின் இணைப்புகளை காலதாமதமின்றி வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு கோடைக்காலத்தில் 22000 மெகாவாட் அளவிற்கு உச்சபட்ச மின் தேவை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.  ஸ்மார்ட் மீட்டர்களுக்கு புதிய ஒப்பந்தம் கோரப்பட உள்ளது. விரைந்து தமிழகம் முழுவதும் புதிய ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்படும்.

மின் கட்டணம்

அதே நேரத்தில் மின்வாரியத்தில் ஓய்வு பெறுபவர்களின்  வயதை அதிகரிப்பது குறித்து மின்வாரியம் எந்த முடிவும் எடுக்கவில்லை.  அதே போல் 14, 500 மெகாவாட் அளவு புதுப்பிக்கத்தக்க மின்சார உற்பத்திக்கு விரைவில் டென்டர் கோரப்படும். மாதாந்திர மின் கணக்கீடு விரைவில் உறுதியாக நடைமுறைக்கு கொண்டு வரப்படும். தமிழ்நாடு முழுவதும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்டவுடன் மாதாந்திர மின் கணக்கீடு நடைமுறை தொடங்கும். இந்த ஆண்டு கோடையில் தாழ்வழுத்த மின்சாரப் பிரச்சனைகள் கண்டிப்பாக இருக்காது எனக் கூறியுள்ளார்.  

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web