தேர்தல் பத்திரம் மூலம் அதிக நன்கொடை... அதிர வைத்த தமிழ்நாட்டு நிறுவனம்!

 
தேர்தல் பத்திரம்

விரைவில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் தேதி மார்ச் 15க்கு பிறகு அறிவிப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை , தொகுதி பங்கீடு  குறித்து மும்மூரமாக செயல்பட்டு வருகின்றன. இந்தியா முழுவதும்  அரசியல் கட்சிகள்  தேர்தல் பத்திரங்கள் மூலம் அதிக நன்கொடை வசூலித்து வருவதாக தொடர் புகார்கள் எழுந்த நிலையில் இந்நிறுவனங்களின் பட்டியலை  தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. 

தேர்தல் பத்திரம்
அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்பட்ட தேர்தல் பத்திரங்களின் விவரங்களை  நேற்று இணையதளத்தில் வெளியிடப்பட்டது. முன்னதாக அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கும் தேர்தல் பத்திர நன்கொடை திட்டத்தை ரத்து செய்து  பிப்ரவரி   15 ம்தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.  தேர்தல் பத்திரங்களை பெற்றவர்கள், அவற்றை பணமாக்கிய அரசியல் கட்சிகள், நன்கொடை தொகை குறித்த அனைத்து தகவல்களும் மார்ச் 6க்குள்  தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் என  பாரத ஸ்டேட் வங்கிக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.  ஆனால் இந்த விவரங்களை வழங்குவதற்கு ஜூன் 30ம் தேதி வரை கால அவகாசம் கேட்கப்பட்டது. இதற்கு நீதிபதிகள் அவகாசம் வழங்க மறுப்பு தெரிவித்து விட்டனர்.  தேர்தல் பத்திர விவரங்களை  மார்ச் 12ம்ந் தேதி மாலைக்குள் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்குமாறு ஸ்டேட் வங்கிக்கு உத்தரவு பிறப்பித்தனர்.  

அதன்படி மறுநாள் மாலையில் தேர்தல் பத்திர விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் பாரத ஸ்டேட் வங்கி வழங்கியது. அதில் கடந்த 2019 ஏப்ரல் முதல் கடந்த பிப்ரவரி 15-ந்தேதி வரை 22,217 தேர்தல் பத்திரங்கள் வாங்கப்பட்டு உள்ளன.   இதில் 22,030 பத்திரங்களை அரசியல் கட்சிகள் பணமாக்கி இருப்பதாகவும் எஸ்பிஐ கூறியிருந்தது.   இந்த விவரங்களை  மார்ச் 15ம் தேதி இன்று மாலை 5 மணிக்குள் இணையதளத்தில் வெளியிட வேண்டும் என   தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவி பிறப்பித்து  இருந்தது. அதன்படி அரசியல் கட்சிகள் பெற்ற தேர்தல் பத்திர விவரங்களை தேர்தல் கமிஷன் தனது இணையதளத்தில் நேற்று மாலையில் வெளியிட்டது.
இதோ பட்டியல் 
பியூச்சர் கேமிங் மற்றும் ஓட்டல் சர்வீசஸ்  - ரூ1,368 கோடி    
மேகா என்ஜினீயரிங் லிட். - ரூ.966 கோடி  
 குவிக் சப்ளை செயின் லிட். - ரூ.410 கோடி 
வேதாந்தா நிறுவனம் - ரூ.400 கோடி 
ஹால்டியா - ரூ.377 கோடி 
பாரதி குழுமம் - ரூ.247 கோடி 
எஸ்செல் மைனிங் - ரூ.224 கோடி 
வெஸ்டர்ன் யுபி பவர் - ரூ.220 கோடி 
கெவன்டர் புட்பார்க் - ரூ.194 கோடி 

சட்டப்பேரவை   இடைத்  தேர்தல்
மதன்லால் லிட் - ரூ.185 கோடி 
டி.எல்.எப். குழுமம் - ரூ.170 கோடி 
யசோதா ஆஸ்பத்திரி - ரூ.162 கோடி 
உட்கல் அலுமினியா - ரூ.145.3 கோடி
ஜிண்டால் ஸ்டீல் - ரூ.123 கோடி 
பிர்லா கார்பன் - ரூ.105 கோடி 
ரங்டா சன்ஸ் - ரூ.100 கோடி 
டாக்டர் ரெட்டிஸ் - ரூ.80 கோடி 
பிரமல் என்டர்பிரைசஸ் - ரூ.60 கோடி 
நவயுகா என்ஜினீயரிங் - ரூ.55 கோடி 
ஷீரடி சாய் எலக்ட்ரிக்கல் - ரூ.40 கோடி 
ஈடில்வெயிஸ் குழுமம் - ரூ.40 கோடி 
சிப்லா லிட் - ரூ.39.20 கோடி 
லட்சுமி மிட்டல் - ரூ.35 கோடி 
கிராசிம் இன்டஸ்ட்ரீஸ் - ரூ.33 கோடி 
ஜிண்டால் ஸ்டெயின்லெஸ் - ரூ.30 கோடி 
பஜாஜ் ஆட்டோ - ரூ.25 கோடி 
சன் பார்மா - ரூ.25 கோடி 
மேன்கைண்ட் பார்மா - ரூ.24 கோடி 
பஜாஜ் பைனான்ஸ் - ரூ.20 கோடி 
மாருதி சுசுகி இண்டியா - ரூ.20 கோடி 
அல்ட்ராடெக் - ரூ.15 கோடி 
டிவிஎஸ் மோட்டார்ஸ் - ரூ.10 கோடி 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web