ஏப்ரல் 3ம் தேதி 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ரயில் மறியல் ... ஜானகிபுரம் ரயில்வே கேட் மூடல் எதிரொலி!

ஜானகிபுரம் ரயில்வே கேட்

 விழுப்புரம் மாவட்டத்தில் ஜானகிபுரம் பகுதியில் அமைந்துள்ள ரயில்வே கேட்  கண்டமானடி உட்பட சுற்றுவட்டார கிராமங்களுக்கு பிரதான சாலையாக  இருந்து வருகிறது.இந்த வழியாகத்தான் இந்த பகுதிகளில் வசித்து வரும் கிராமங்களில் இருந்து அரசு மேல்நிலை பள்ளி, அரசு ஆரம்ப சுகாதார நிலையம், கால்நடை மருத்துவமனை, தபால் நிலையங்களுக்கு செல்லக்கூடிய பாதையாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.  
இந்நிலையில் விழுப்புரம்-நாகப்பட்டினத்திற்கு இடையே 4 வழிச்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பகுதியில் உயர்மட்ட மேம்பாலம் கட்டப்பட்டு வருவதால்  ஜானகிபுரம் ரயில்வே கேட் மூடப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்தது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே மார்ச் 23ம் தேதி இரவோடு இரவாக இந்த ரயில்வே கேட் மூடப்பட்டது.  

ஜானகிபுரம் ரயில்வே கேட்

மறுநாள் காலையில் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஜானகிபுரம்  உட்பட சுற்றுப்புற கிராமவாசிகள்  பாலத்தின்கீழ் உள்ள நாகப்பட்டினம் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்திய போலீசார்  வருவாய் துறை மூலம் சமாதான கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து தருவதாக உறுதி அளித்தனர். அத்துடன்  ரயில்வே துறைஅதிகாரிகள் வரவழைக்கப்பட்டு பேசி தீர்வு காணப்படும் எனவும் கூறினார்.ஆனால் இதுவரை  எந்த பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை.
ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று தங்களது வீடுகளில் கருப்புகொடி ஏற்றி  போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் ஏப்ரல் 3ம்தேதி ரயில் மறியல் போராட்டத்திலும் ஈடுபட இருப்பதாக தெரிவித்துள்ளனர். இந்த போஸ்டரில்  கண்டமானடி, ஜானகிபுரம், கொளத்தூர், சித்தாத்தூர், வேலியம்பாக்கம், தளவானூர், திருப்பாச்சனூர், பிடகாம், மரகதபுரம், கண்டம்பாக்கம் என 10 கிராம மக்கள் சார்பில் ஏப்ரல்3ம் தேதி காலை வந்தே பாரத் ரயில் மறியல் போராட்டம் நடைபெற உள்ளது.  சுற்றுப்புற கிராமப்ப்புற மக்களுக்கோ, ஊராட்சிக்கோ எந்தவித முன்னறிவிப்பும் இன்றி இரவோடு இரவாக ரயில்வேகேட் மூடப்பட்டதை கண்டித்து இந்த போராட்டம் நடைபெறும் என  போஸ்டர் அடித்து ஒட்டப்பட்டுள்ளது.  இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.விழுப்புரம் மாவட்டத்தில் ஜானகிபுரம் பகுதியில் அமைந்துள்ள ரயில்வே கேட்  கண்டமானடி உட்பட சுற்றுவட்டார கிராமங்களுக்கு பிரதான சாலையாக  இருந்து வருகிறது.இந்த வழியாகத்தான் இந்த பகுதிகளில் வசித்து வரும் கிராமங்களில் இருந்து அரசு மேல்நிலை பள்ளி, அரசு ஆரம்ப சுகாதார நிலையம், கால்நடை மருத்துவமனை, தபால் நிலையங்களுக்கு செல்லக்கூடிய பாதையாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.  
இந்நிலையில் விழுப்புரம்-நாகப்பட்டினத்திற்கு இடையே 4 வழிச்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பகுதியில் உயர்மட்ட மேம்பாலம் கட்டப்பட்டு வருவதால்  ஜானகிபுரம் ரயில்வே கேட் மூடப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்தது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே மார்ச் 23ம் தேதி இரவோடு இரவாக இந்த ரயில்வே கேட் மூடப்பட்டது.  

ஜானகிபுரம் ரயில்வே கேட்
மறுநாள் காலையில் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஜானகிபுரம்  உட்பட சுற்றுப்புற கிராமவாசிகள்  பாலத்தின்கீழ் உள்ள நாகப்பட்டினம் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்திய போலீசார்  வருவாய் துறை மூலம் சமாதான கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து தருவதாக உறுதி அளித்தனர். அத்துடன்  ரயில்வே துறைஅதிகாரிகள் வரவழைக்கப்பட்டு பேசி தீர்வு காணப்படும் எனவும் கூறினார்.ஆனால் இதுவரை  எந்த பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை.
ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று தங்களது வீடுகளில் கருப்புகொடி ஏற்றி  போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் ஏப்ரல் 3ம்தேதி ரயில் மறியல் போராட்டத்திலும் ஈடுபட இருப்பதாக தெரிவித்துள்ளனர். இந்த போஸ்டரில்  கண்டமானடி, ஜானகிபுரம், கொளத்தூர், சித்தாத்தூர், வேலியம்பாக்கம், தளவானூர், திருப்பாச்சனூர், பிடகாம், மரகதபுரம், கண்டம்பாக்கம் என 10 கிராம மக்கள் சார்பில் ஏப்ரல்3ம் தேதி காலை வந்தே பாரத் ரயில் மறியல் போராட்டம் நடைபெற உள்ளது.  சுற்றுப்புற கிராமப்ப்புற மக்களுக்கோ, ஊராட்சிக்கோ எந்தவித முன்னறிவிப்பும் இன்றி இரவோடு இரவாக ரயில்வேகேட் மூடப்பட்டதை கண்டித்து இந்த போராட்டம் நடைபெறும் என  போஸ்டர் அடித்து ஒட்டப்பட்டுள்ளது.  இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web