1,400 க்கும் மேற்பட்டோர் பலி... வங்கதேசத்தில் தொடரும் வன்முறை!
வங்கதேசத்தில் 2024க் அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக மாணவர்கள் பெருமளவில் திரண்டு போராட்டங்கள் நடத்தினர். இந்த போராட்டங்களின்போது நிகழ்ந்த வெவ்வேறு வன்முறை சம்பவங்களில் குறிப்பாக ஜூலை 15 முதல் ஆக. 5 வரையிலான 3 வாரங்களில் மட்டும் உயிரிழந்தோர் எண்ணிக்கை சுமார் 1,400க்கும் அதிகமாகியுள்ளது.

இது குறித்து ஐநா மனித உரிமைகள் அலுவலகம் தெரிவித்துள்ளது. அந்நாட்டின் பாதுகாப்புப் படைகள் மனித உரிமைகள் மீறலில் ஈடுபட்டதாகவும், போராட்டக்காரர்களை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றிருப்பதும் ஐ. நா. தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், இதன் காரணமாக போராட்டங்களில் மனித உரிமை மீறல் குற்றங்கள் அதிக அளவில் நடந்ததாகவும், இது குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும். வங்கதேசத்தில் முன்னாள் பிரதமருக்கு எதிரான போராட்டம் மற்றும் வன்முறை சம்பவங்களில் 11,700க்கும் மேற்பட்டோர் சிறைப்பிடிக்கப்பட்டு உள்ளனர்.

வன்முறை சம்பவங்களில் கொல்லப்பட்டோரில் 12 முதல் 13 சதவிகிதத்தினர் 180 பேர் குழந்தைகள் என்பது பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது. போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்த அதிகாரத்தில் இருப்பவர்களின் இசைவுடன் காட்டுமிராண்டித்தனமாக பாதுகாப்புப் படையினர் நடந்து கொண்டனர். ஐ. நா. மனித உரிமைகள் தலைவர் வோல்கர் டர்க் தெரிவித்துள்ளார். வங்கதேசத்தில் ஆட்சி மாறியிருந்தாலும் நிர்வாக அமைப்பில் மாற்றங்கள் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!
