20க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள்... ஆபாசப் படங்களை இணையதளங்களில் வெளியிட்ட மாணவர் கைது!

 
ஆபாச

திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் பிற்கும் 20-க்கும் மேற்பட்ட மருத்துவ மாணவிகளின் படங்களை ஆபாசமாக மார்பிங் செய்து இணையத்தில் பதிவேற்றிய அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றுள்ள இந்தச் சம்பவம்  அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மருத்துவக் கல்லூரியில் 3-ஆம் ஆண்டு எம்பிபிஎஸ் படித்து வரும் ஏபல் அகஸ்டின் என்ற மாணவர், சக மாணவிகளின் இன்ஸ்டாகிராம் புகைப்படங்களைத் திருடி ஆபாசமாக மார்பிங் செய்துள்ளார். மார்பிங் செய்யப்பட்ட புகைப்படங்களை ஆபாச இணையதளங்களில் பதிவேற்றியதாக எழுந்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் அந்த மாணவரை அதிரடியாகக் கைது செய்தனர். இந்த கொடூரமான செயலால் சுமார் 20-க்கும் மேற்பட்ட மருத்துவ மாணவிகள் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஆபாச வீடியோ

கைது செய்யப்பட்ட குற்றவாளிக்கு உடனடி ஜாமீன் கிடைத்ததால் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கொதிப்படைந்துள்ளனர்: கைது செய்யப்பட்ட மாணவர் ஏபல் அகஸ்டினுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கிய செய்தி பரவியதைத் தொடர்ந்து, 100-க்கும் மேற்பட்ட மருத்துவக் கல்லூரி மாணவ-மாணவிகள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு உரிய நீதியும், குற்றவாளி மீது முறையான கடுமையான சட்ட நடவடிக்கையும் எடுக்கப்பட வேண்டும் வலியுறுத்தி மாணவர்கள் தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.