பெரும் பரபரப்பு.... 200க்கும் மேற்பட்ட இந்து முன்னணியினர் கைது!

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்று திருப்பரங்குன்றம்.இங்கு தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த மலையின் ஒரு பக்கம் சிக்கந்தர் தர்காவும் அமைந்துள்ளது. இங்கு இஸ்லாமியர்கள் பலரும் சென்று வரும் நிலையில் இந்த தர்காவில் ஆடு கோழி பலியிட்டதாகவும், ராமநாதபுரம் எம்.பி நவாஸ்கனி அசைவ உணவு உண்டதாகவும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் பலரும் சமூக வளைதளங்ககளில் திருப்பரங்குன்றம் மலை யாருக்கு சொந்தம் என்பது குறித்து நெட்டிசன்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
தற்போது இந்த விவகாரத்தில் இந்து முன்னணியினர் தலையிட்டு இன்று இந்து முன்னணி அமைப்பினர் திருப்பரங்குன்றம் கோவில் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுப்பு தெரிவித்திருந்த போதிலும் தடையை மீறி போராட்டம் நடத்த வாய்ப்பு இருப்பதாக சமூக வலைதளங்ககளில் இந்த தகவல் பரவியது. இதனையடுத்து தமிழகம் முழுவதும் அசாதாரண சூழல் உருவாக வாய்ப்புள்ளதால் முன்னெச்சரிக்கை நடவ டிக்கையாக போலீசார் அந்தந்த பகுதியில் உள்ள பா.ஜ.க.வினர் மற்றும் இந்து முன்னணி அமைப்பினரை கண்காணித்து வருகின்றனர்.
திருப்பரங்குன்றம் மலையை பாதுகாக்க வலியுறுத்தி இன்று அறப்போராட்டம் நடத்தப்போவதாக பா.ஜ.க., இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்பினர் அழைப்பு விடுத்திருந்தனர். இந்த போராட்டத்துக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருந்தது. அத்துடன் ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் இருந்தும் பா.ஜ.க., இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் அங்கு செல்ல முயன்ற போது போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து திண்டுக்கல் மாவட்டத்தில் 160க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பலர் வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இதேபோல் தேனி மாவட்டத்திலும் இந்து அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு தனியார் மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்.
தொடர்ந்து தேனி, பெரியகுளம், போடி, ஆண்டிபட்டி உட்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சிவசேனா, வி.எச்.பி., பா.ஜ.க. உட்பட பல இந்து அமைப்பைச் சேர்ந்த பெண்கள் 80 பேர் கைது செய்யப்பட்டு தனியார் மண்டபத்தில் அடைக்கப்பட்டுள்ளனர். இதே போல் திண்டுக்கல் பேருந்து நிலையம், ரயில் நிலையம் உட்பட முக்கிய இடங்களில் போராட்டம் நடைபெறுவதை தடுக்க போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டு இருந்தனர். பழனி கோவில் உட்பட அறுபடை வீடுகள் கோவில் முன்பும் போலீசார் அதிக அளவில் பாதுகாப்புக்காக நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதால் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!