200க்கும் மேற்பட்டவர்களுக்கு வாந்தி, மயக்கம்... தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட உணவில் பல்லி - நயினார் நாகேந்திரன் கண்டனம்!

 
பல்லி

சென்னை ஆவடி மாநகராட்சி சார்பில் தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட காலை உணவில் பல்லி கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை ஆவடி மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு வழக்கம்போல் காலை உணவு வழங்கப்பட்டது. அதில் பல்லி கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். அந்த உணவைச் சாப்பிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்களுக்குத் திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டதை அடுத்து, அவர்கள் உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பல்லி

இந்த சம்பவம் குறித்துப் பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட உணவில் பல்லி கிடந்த செய்தி, முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசின் அலட்சியப் போக்கிற்கு மற்றொரு சான்றாக அமைந்துள்ளது.

தேர்தல் நேரங்களில் மட்டும் தூய்மைப் பணியாளர்களுடன் அமர்ந்து உணவு உண்டு வீடியோ எடுத்து விளம்பரம் தேடும் அரசியல் கட்சிகள், ஆட்சி அதிகாரத்திற்கு வந்தவுடன் அவர்களின் நலனைக் கண்டுகொள்வதே இல்லை. நமது சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்திருக்கும் பணியாளர்களுக்குச் சுத்தமான மற்றும் தரமான உணவைக்கூட வழங்க முடியாமல் போவது வெட்கக்கேடானது.

நயினார் நாகேந்திரன்

எனவே, தூய்மைப் பணியாளர்களைக் கனிவுடன் நடத்துமாறு தனது கட்சியினருக்கு அறிவுறுத்துவதோடு, அவர்களுக்குத் தரமான மற்றும் சுகாதாரமான உணவு கிடைப்பதை முதலமைச்சர் உறுதி செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.