3 நாட்களில் 25க்கும் மேற்பட்ட வீடுகளில் கொள்ளை... தப்பியோட முயன்ற 2 கொள்ளையர்களுக்கு கை, கால் முறிவு!

 
கோமதி

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர்புடைய  3 கொள்ளையர்களை ராசிபுரத்தில் போலீசார் கைது செய்ய முயன்றதில், போலீசாரிடம் இருந்து தப்பியோட கொள்ளையார்கள் முயன்றதில் இரண்டு பேருக்கு கை, காலில் முறிவு ஏற்பட்டது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த முத்துக்காளிப்பட்டி ஶ்ரீராம் நகர் பகுதியை சேர்ந்த கோமதி(45), வெண்ணந்தூர் பகுதியில் கூட்டுறவு சங்க ஊழியராக பணிபுரிந்து வருகிறார். முத்து காளிப்பட்டி பகுதியில் உள்ள இவரது வீட்டில் கடந்த மாதம் 20 ஆம் தேதி வீட்டின் பூட்டை உடைத்து 18 சவரன் தங்க நகை திருட்டுப் போனதாக ராசிபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். புகாரை பெற்ற ராசிபுரம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணையில் மேற்கொண்டு வந்தனர்.

நீட் தேர்வில் முதலிடம்! நாமக்கல் மாவட்டம் அசத்தல்!

திருட்டு நடைபெற்ற வீட்டின் அருகே இருசக்கர வாகனத்தில் 3 நபர்கள் செல்வதை சிசிடிவி கேமரா மூலம் அறிந்த காவல்துறையினர் பல்வேறு பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் நேற்றிரவு ராசிபுரம் காவல் துணை கண்காணிப்பாளர் எம்.விஜயகுமார் தலைமையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அணைப்பாளையம் அருகே காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்ததை கண்ட 3 இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக போலீசாரிடம் இருந்து தப்பிச் செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது இருசக்கர வாகனத்தை டேவிட் என்ற நபர் அதிவேகமாக ஒட்டிய போது நிலை தடுமாறி கீழே விழுந்ததில் மூவரில், இருவருக்கு கை, கால் முறிவு ஏற்பட்டது. அவர்கள் ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இருசக்கர வாகனத்தில் சென்ற 3 பேரையும் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டதில், சென்னையை சேர்ந்த டேவிட்(எ)சுந்தர்ராஜ்(24), மணி(22), வேலூரைச் சேர்ந்த மணிகண்டன்(47) ஆகியோர் என தெரியவந்தது. 

போலீசாரின் தொடர் விசாரணையில் கடந்த மாதம் 20ம் தேதி முதல் 23ம் தேதி வரை சேலம், ராசிபுரம், நாமக்கல், புதுக்கோட்டை, மதுரை, தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 3 நாட்களில் மட்டும் 25க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் இரு சக்கர வாகனங்களை திருடிச் சென்றது தெரிய வந்தது. மூன்று கொள்ளையர்களும் இருசக்கர வாகனத்தில் பல்வேறு மாவட்டங்களில் சென்று ஆள் நடமாட்டம் இல்லாத வீடுகளை நோட்டமிட்டு திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்தது, தொடர்ந்து மாவட்டம் விட்டு மாவட்டம் சென்று கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்தது தெரியவந்துள்ளது.

தற்போது பிரபல 3 திருடர்கள் மீது மட்டும் 74 வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web