புற்றுநோய்க்கு தினமும் 27,000 பேர் உயிரிழப்பு - உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சி தகவல்!

 
உலக சுகாதார அமைப்பு யு.என்.ஓ.

உலகளவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் புற்றுநோய் பாதிப்புகள் மற்றும் அதனால் ஏற்படும் மரணங்கள் குறித்த அதிர்ச்சியூட்டும் புதிய அறிக்கை ஒன்றை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது. இந்த 2026-ம் ஆண்டு அறிக்கையின்படி, உலகெங்கிலும் நாளொன்றுக்குச் சராசரியாக 27,000 பேர் புற்றுநோய் பாதிப்பால் தங்களது உயிரை இழக்கிறார்கள் என்ற அதிர்ச்சித் தகவல் வெளிவந்துள்ளது.

உலக சுகாதார அமைப்பின் புள்ளிவிவரங்களின்படி, உலகளவில் ஏற்படும் ஒட்டுமொத்த புற்றுநோய் பாதிப்புகள் மற்றும் இறப்புகளில் பாதியதிக்கம் ஆசிய நாடுகளிலேயே ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக, உலகளாவிய புற்றுநோய் பாதிப்புகளில் 50.7% பாதிப்புகளும், அதன் காரணமாக நிகழும் ஒட்டுமொத்த மரணங்களில் 56.5% தடையற்ற மரணங்களும் ஆசிய கண்டத்தில் மட்டுமே பதிவாகி வருவது உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

புற்றுநோய்

மனிதர்களின் மாறிவரும் அன்றாட பழக்கவழக்கங்கள் மற்றும் சுற்றுச்சூழல் சீர்கேடுகளே இந்த அளவிற்குப் புற்றுநோய் பரவுவதற்குக் காரணம் என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது: புகையிலைப் பொருட்களின் பயன்பாடு மற்றும் மதுப்பழக்கம் ஆகியவை மிக முக்கியக் காரணிகளாக உள்ளன. தற்போதைய காலகட்டத்தில் மிக மோசமடைந்து வரும் காற்று மாசுபாடு மற்றொரு முக்கியக் காரணமாகும்.

உடல் உழைப்பில்லாத நவீன வாழ்வியல் முறைகள் மற்றும் துரித உணவுப் பழக்கவழக்கங்கள் இப்பாதிப்பை மேலும் தீவிரப்படுத்துகின்றன. தற்போதைய இந்த அபாயகரமான நிலை நீடித்தால், வரும் 2050-ஆம் ஆண்டிற்குள் உலகளவில் ஒட்டுமொத்த புற்றுநோய் பாதிப்புகளின் எண்ணிக்கை 3.5 கோடியாக உயரும் என்று உலக சுகாதார அமைப்பு கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது.

புற்றுநோய் தடுப்பூசி

எனவே, ஆரம்பக் கட்டத்திலேயே புற்றுநோய்க்கான அறிகுறிகளைக் கண்டறிந்து சிகிச்சை பெறுவதும், ஆரோக்கியமான வாழ்வியல் முறைகளைப் பின்பற்றுவதும் மட்டுமே இந்த ஆபத்தில் இருந்து மனிதகுலத்தைக் காப்பதற்கான ஒரே வழி என்று மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.