கோவையில் கொசு மருந்து அடித்ததால் 2 பேர் உயிரிழப்பு... பொதுமக்கள் எதிர்ப்பையும் மீறி மருந்து அடித்தது அம்பலம்!

 
kovai

கோயம்புத்தூர் மாவட்டம் அன்னூர் பேரூராட்சிக்கு உட்பட்ட ஏழாவது வார்டு பகுதியில் சில நாட்களுக்கு முன்பு மூன்று குழந்தைகள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் அளித்த புகாரின் அடிப்படையில் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அப்பகுதியில் கொசு ஒழிப்பு மற்றும் புகை அடிக்கும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன. அப்போது பேரூராட்சி ஊழியர்கள் பொதுமக்களின் எதிர்ப்பை மீறி வீடுகளுக்கு உள்ளேயும் அதிக அளவில் மருந்து புகையை அடித்ததாகக் கூறப்படுகிறது.

ஆம்புலன்ஸ்

இதன் காரணமாக ஆட்டோ ஓட்டுநரான மோகன் என்பவரது வீட்டுக்குள் சென்றும் புகை அடிக்கப்பட்ட நிலையில் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தனது தந்தைக்கு சுவாசக் கோளாறு பிரச்சனை உள்ளதாக அவரது குடும்பத்தினர் கூறியும் பணியாளர்கள் அதைக் கண்டுகொள்ளாமல் மருந்து அடித்துள்ளனர். இதனால் ஏற்பட்ட தீவிர மூச்சுத்திணறல் காரணமாக மோகன் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த பிரேமா என்கிற ராணி ஆகிய இருவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

மருத்துவமனை ஆம்புலன்ஸ் போலீஸ் கொலை கத்திக்குத்து

வீடுகளுக்குள் புகுந்த அதிகப்படியான கொசு மருந்து புகையால் மூச்சுத்திணறி முதியவர்கள் இருவர் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த திடீர் மரணம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். முறைப்படி எச்சரிக்கைகளைப் பின்பற்றாமல் அலட்சியமாகச் செயல்பட்ட ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும் உறவினர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.