லட்டு, ஜிலேபியை முந்திய முந்திரி இனிப்பு… தீபாவளியில் குவிந்த ஆர்டர்கள்!
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின்போது இந்தியர்கள் ஆன்லைனில் அதிகம் ஆர்டர் செய்த இனிப்பு வகைகளில் முந்தியது காஜு கத்லி. இதனை உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கி வெளியிட்டுள்ள பண்டிகைக்கால புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
நாடு முழுவதும் நவம்பர் 8ஆம் தேதி தீபாவளி கொண்டாடப்பட்டது. இதையொட்டி நவம்பர் 6 முதல் 8ஆம் தேதி வரையிலான மூன்று நாட்களில் ஸ்விக்கி மூலம் செய்யப்பட்ட உணவு ஆர்டர்களை நிறுவனம் ஆய்வு செய்துள்ளது.
அதில், இனிப்பு வகைகளில் காஜு கத்லி முதலிடத்தைப் பிடித்துள்ளது. அடுத்தடுத்த இடங்களில் மோதிச்சூர் லட்டு, ரசகுல்லா, குலாப் ஜாமூன் ஆகியவை இடம்பெற்றுள்ளன. குறிப்பாக பெங்களூரு, மும்பை, டெல்லி, ஜெய்ப்பூர், ஐதராபாத் நகரங்களில் காஜு கத்லிக்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ளது.உணவு ஆர்டர்களைப் பொறுத்தவரை மசாலா தோசை, பனீர் பட்டர் மசாலா ஆகியவையும் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவுகளில் இடம்பெற்றுள்ளன.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு தீபாவளி காலத்தில் ஸ்விக்கி உணவு டெலிவரி ஆர்டர்கள் 10.7 சதவீதம் அதிகரித்துள்ளன. இந்த மூன்று நாட்களில் சராசரியாக ஒரு மணி நேரத்திற்கு 97,545 ஆர்டர்கள் டெலிவரி செய்யப்பட்டதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.ஐதராபாத்தில் ஒருவர் 57 பாக்கெட் இனிப்புகளை ரூ.41,895-க்கு ஆர்டர் செய்ததும், மும்பையில் ஒருவர் ரூ.41,772 மதிப்பிலான இனிப்பு ஹாம்பர்களை வாங்கியதும் குறிப்பிடத்தக்கது.
