வீடு புகுந்து தாய், மகள் வெட்டிக்கொலை; இன்ஸ்டா காதலன் வெறித்தனம்!

 
இன்ஸ்டா வெட்டிக்கொலை காதல்

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் திருமணத்திற்குப் பெற்றோர் சம்மதிக்காததால், இன்ஸ்டாகிராம் காதலன் வீடு புகுந்து தாய் மற்றும் மகளைச் சரமாரியாக வெட்டிக்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பல்லடம் பச்சாபாளையத்தைச் சேர்ந்த பனியன் தொழிலாளி தனலட்சுமி (42) மற்றும் அவரது மகள் பூவரசி (22). கோவை தனியார் கல்லூரியில் எம்.சி.ஏ பயின்று வந்த திண்டுக்கல்லைச் சேர்ந்த அக்சயன் (27) என்பவருடன் பூவரசிக்கு கடந்த 3 ஆண்டுகளாக இன்ஸ்டாகிராம் மூலம் காதல் இருந்துள்ளது. இருவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்த போதிலும், பூவரசியின் பெற்றோர் இவர்களது திருமணத்திற்குச் சம்மதிக்காமல் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்துள்ளனர்.

பாலியல் கொலை உல்லாசம் க்ரைம்

இதனால் ஆத்திரமடைந்த அக்சயன் பல்லடத்தில் தங்கித் தனலட்சுமியின் வீட்டிற்குச் சென்று திருமணத்திற்கு வற்புறுத்தியுள்ளார். இன்றும் அவர்களுக்குள் தகராறு ஏற்படவே, தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் தனலட்சுமி மற்றும் பூவரசி இருவரையும் சரமாரியாக வெட்டியுள்ளார்.

இதில் பலத்த காயமடைந்த தாய், மகள் இருவருமே சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த பல்லடம் காவல்துறையினர், கொலையாளி அக்சயனைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.