மகன் தற்கொலை செய்துகொண்ட அதே இடத்தில் தாயும் தற்கொலை... துக்கம் தாங்காமல் உயிரைவிட்ட சோகம்!
கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே மன உளைச்சல் காரணமாக மகன் தற்கொலை செய்து கொண்ட நிலையில், அந்தத் துக்கம் தாங்காமல் அவரது தாயும் அதே இடத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அணுக்கம்பட்டைச் சேர்ந்த பெட்ரோல் பங்க் ஊழியர் சந்தோஷ்குமார் (39), சில நாட்களாக வேலைக்குச் செல்லாமல் தீவிர மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், அவர் அப்பகுதியிலுள்ள முந்திரித் தோப்பில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

தன் அன்பு மகன் இறந்துவிட்டதைத் தாங்க முடியாத அவரது தாய் ராஜகுமாரி (65), துக்கம் பிடி இன்றி மனம் உடைந்து போயுள்ளார். தொடர்ந்து, தனது மகன் உயிரிழந்த அதே முந்திரித் தோப்பில் உள்ள மற்றொரு மரத்தில் அவரும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். அடுத்தடுத்து தாய் மற்றும் மகன் உயிரிழந்த இந்தச் பரிதாபச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் கண்ணீரையும் ஏற்படுத்தியுள்ளது.
