1 வயது குழந்தையை தனியே விட்டு சென்ற தாய்.. சிறிது நேரத்தில் நேர்ந்த கொடூரம்.. கதறி அழுத குடும்பம்!

செங்கல்பட்டு அருகே ஒரு வயது சிறுவன் தண்ணீர் வாளியில் விழுந்து இறந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். செங்கல்பட்டு அருகே மேலச்சேரியில் வசித்து வரும் மணிகண்டன் (28) எலக்ட்ரீஷியனாக பணிபுரிகிறார். வண்டலூர் அருகே கண்டிகையில் வசித்து வந்த ஜாய்ஸுக்கும் கடந்த 2019ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு நான்கரை வயதில் ஆல்வின் ஜோ, ஒரு வயதில் அகஸ்டின் என இரண்டு மகன்கள் உள்ளனர்.
இந்த நிலையில், இன்று, தாய் ஜாய்ஸ் வீட்டிற்கு வெளியே அமர்ந்து குழந்தைக்கு அகஸ்டினுக்கு உணவளித்தார். குழந்தைக்கு உணவளித்த பிறகு, ஜாய்ஸ் குழந்தையை வெளியே விட்டுவிட்டு வீட்டிற்குள் சென்றார். பின்னர் திரும்பி வந்தபோது, குழந்தை அகஸ்டின் காணாமல் போனார். இந்த நிலையில், வீட்டின் அருகே உள்ள தெரு வடிகாலில் இருந்து தண்ணீர் நிரப்பப்பட்ட வாளியில் குழந்தை அகஸ்டின் தலைகீழாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
உடனடியாக செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த குழந்தை அகஸ்டின், சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் பரிதாபமாக இறந்தார். செங்கல்பட்டு பாலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.இந்த சம்பவம் மேலச்சேரி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!