அம்மிக்கல்லால் தாக்கி தாய் கொலை... மனநலம் பாதிக்கப்பட்ட மகன் கொடூரம்! தாயைக் கொடூரக் கொலை

 
அம்மிக்கல்

தூத்துக்குடி திருச்செந்தூர் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட மகன், தனது தாயாரை அம்மிக்கல்லால் அடித்துக் கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குடும்பத் தகராறு அல்லது மனநிலை பாதிப்பு காரணமாக நிகழ்ந்திருக்கக் கூடிய இந்தக் கொடூரச் செயல் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஆம்புலன்ஸ்

திருச்செந்தூர் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட மகன் தங்க பாலன் (27), தனது தாயார் ரேணுகாவை (62) அம்மிக்கல்லால் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த ரேணுகா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அதன்பிறகு, உயிரிழந்த தாயின் புகைப்படத்தை வாட்ஸ்அப் மூலம் தனது அண்ணனுக்கு அனுப்பி அவர் இந்த கோரச் செயலை வெளிப்படுத்தியுள்ளார்.

தகவலறிந்து உடனடியாகச் சம்பவ இடத்திற்குச் சென்ற திருச்செந்தூர் தாலுகா போலீசார், ரேணுகாவின் உடலைக் கைப்பற்றிப் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட தங்க பாலன் தற்போது அரசு மருத்துவமனையில் காவல்துறையினரின் பாதுகாப்பான கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகிறார்.