திருமணம் செய்ய மறுத்த இரண்டு குழந்தைகளுக்கு தாய்.. ஆத்திரத்தில் இளைஞர் செய்த கொடூரம்!

 
ஃபரிதா கதூன்

கொல்கத்தாவைச் சேர்ந்த ஃபரிதா கதூன் (42) பெங்களூரில் இயங்கி வரும் மசாஜ் சென்டரில் (ஸ்பா) கடந்த 4 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். அவருக்கு 21 மற்றும் 16 வயதில் இரண்டு மகள்கள் உள்ளனர். அவர்கள் கல்கத்தாவில் படித்து வருகின்றனர். இந்நிலையில், 32 வயதான ரீகன் அகமது என்கிற கிரீஷ் என்பவர் தனியார் கார் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். ஃபரிதா காடூன் பணிபுரிந்த ஸ்பா மையத்திற்கு அடிக்கடி சென்று வந்தார்.

இதனிடையே, கிரிஷ்-க்கு ஃபரிதா கதூனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ள. அதன் பிறகு இருவரும் நெருங்கி பழக ஆரம்பித்தனர். இவர்களின் நெருக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதனால், ஃபரிதாவை திருமணம் செய்து கொள்ளுமாறு கிரிஷ் வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால் ஃபரிதா இதற்கு உடன்படாததால், கிரிஷ் கோரிக்கையை ஏற்க மறுத்துர்.

இந்நிலையில் கடந்த மாதம் ஃபரிதா தனது குழந்தைகளை பார்க்க கொல்கத்தா சென்றார். மீண்டும் பெங்களூர் வரும்போது தனது மகள் ஒருவரை அழைத்து வந்தார். மகளும் ஃபரிதாவும் பெங்களூரில் உள்ள ஓயோ ஹோட்டலில் தங்கியுள்ளனர். இந்நிலையில் கடந்த 28ம் தேதி கிரீஷின் பிறந்தநாள் வந்துள்ளது. அதனால் தனது பிறந்தநாளை ஃபரிதாவுடன் கொண்டாட நினைத்த கிரிஷ், அந்த நாள் முழுவதும் ஃபரிதாவுடன் மால்கள் மற்றும் ஹோட்டல்களில் கழித்தார்.

இதற்கு நடுவே, திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை என்றால் ஃபரிதாவின் பிறந்தநாளில் கொன்றுவிடுவேன் என்று நினைத்த கிரீஷ், ஃபரிதாவுக்கு தெரியாமல் கத்தியை வாங்கி மறைத்து வைத்துள்ளார். நாள் முழுவதும் பொது இடங்களில் சுற்றித் திரிந்த கிரீஷ், இரவு ஏழு மணியளவில் ஃபரிதாவை ஒரு பூங்காவிற்கு அழைத்துச் சென்று, ஃபரிதாவை மீண்டும் திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தினார். ஆனால் ஃபரிதா திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

கொலை

இதனையடுத்து திட்டமிட்டபடி, தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஃபரிதாவை மாறி மாறி 15 முறை குத்தினார். இதில் ஃபரிதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவத்தை கண்ட அப்பகுதியில் உள்ள இளநீர் வியாபாரி ஒருவர் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். போலீசார் சம்பவ இடத்துக்கு வருவதற்குள் கிரீஷ் அங்கிருந்து தப்பியோடி அருகில் உள்ள ஜெயா நகர் காவல் நிலையத்தில் சரணடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள் 

From around the web