தாய் ஆடு பால் கொடுக்க மறுப்பு; ஆட்டுக்குட்டிகளுக்கு தாயான பசு மாடு!
Nov 3, 2026, 10:25 IST
நெல்லை மாவட்டம் ஏர்வாடி அருகே, தாய் ஆடு பால் கொடுக்க மறுக்கும் நேரங்களில் இரண்டு ஆட்டுக்குட்டிகளுக்கும் பசு மாடு பால் கொடுத்து பசியாற்றும் நெகிழ்ச்சியான சம்பவம் கிராம மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
கோதைசேரி கிராமத்தைச் சேர்ந்த சந்தனம் (58) என்ற விவசாயி ஆடு, மாடுகளை வளர்த்து வருகிறார். இவரது பசு மாடு சமீபத்தில் கன்று ஈன்றுள்ளது. அதேபோல், அவர் வளர்க்கும் ஆடு ஒன்றும் இரண்டு குட்டிகளை ஈன்றுள்ளது.
இந்நிலையில், தாய் ஆடு அவ்வப்போது தனது குட்டிகளுக்குப் பால் கொடுக்க மறுப்பதாகக் கூறப்படுகிறது. அப்போது அந்த இரண்டு ஆட்டுக்குட்டிகளும் அருகில் இருக்கும் பசு மாட்டிடம் சென்று பால் குடிக்க
