ஒரே அறையில் மகனுடன் 10வது பொதுத்தேர்வு எழுதிய தாய்... குவியும் வாழ்த்துகள்!

யாதகிரி மாவட்டம் ஷாகாபுரா தாலுகாவில் சாகாரா கிராமத்தில் வசித்து வருபவர் 32 வயது கங்கம்மா.இவருக்கு திருமணமாகி 15 வயதில் மல்லிகார்ஜுனா என்ற மகன் உள்ளான். கங்கம்மா 9ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். இதனால் அவருக்கு நீண்ட காலமாக 10ம் வகுப்பு படித்து விட வேண்டும் என தீராத வேட்கையில் இருந்தார். அவரது மகன் மல்லிகார்ஜுனா நடப்பு கல்வி ஆண்டில் எஸ்.எஸ்.எல்.சி. படித்து வந்தார். இதனால் மகன் துணையுடன் 10ம் வகுப்பு படிக்க முடிவு செய்தார் கங்கம்மா.
தேர்வு எழுதவும் கங்கம்மாவுக்கும், அவரது மகன் மல்லிகார்ஜுனாவுக்கும் அதே பகுதியில் உள்ள அரசு பளளியில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டு இருந்தது. இதனால் தாயும், மகனும் தேர்வு எழுத ஒன்றாக வந்திருந்தனர். இருவருக்கும் பெயர் லிஸ்ட் படி தனித்தனி வகுப்பறைகள் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், இருவரும் வெவ்வேறு அறைகளில் அமர்ந்து கங்கம்மாவவும், அவரது மகனும் தேர்வு எழுதினர். தாயும், மகனும் ஒரே நேரத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதியது மாணவர்கள், ஆசிரியர்கள் மத்தியில் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!