மோசமாகும் தாயார் உடல்நிலை.. சென்னையில் தங்க போகும் பாலிவுட் நடிகர் அமீர்கான்..!

 
அமீர்கான்
பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கான் சென்னையில் சிறிய காலம் தங்கப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது.

பாலிவுட் நடிகர் அமீர்கானின் தாய் ஜீனத் ஹுசைன். இவருக்கு 89 வயதாகிறது. இந்நிலையில் இவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் தாய்க்கு உதவியாக இருக்க, அமீர்கான் சென்னையில் சில மாதங்கள் தங்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

Aamir Khan to shift to Chennai amid mom Zeenat Hussain's ill health: Report  | Bollywood - Hindustan Times

நடிகர் அமிர்கான் சமீபத்தில் கொடுத்த நேர்காணலில் கூட இது தொடர்பாக பேசி உள்ளார் “ சினிமாவில் நடிப்பதை சிறிது காலம் நிறுத்திவிட்டு, தாய் மற்றும் மூன்று குழந்தைகளான ஜுனைய்டு, இரா, அசத் ஆகியோரை கவனித்துகொள்ள உள்ளேன்” என்று கூறினார்.

When Aamir Khan Labeled Nepotism In Bollywood As 'Bewakoofi', Gave The  World An Open Challenge For Anyone Knowing That His Sister Is Working On TV  & Said, "Nobody Knows She's My Sis"

மும்பையில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் அவர் பேசிபோது” நான் ஒரு நடிகராக இருக்கும்போது, அதில்தான் அதிக கவனம் செலுத்தினேன். எனது வாழ்வில் வேறு எதுவும் நடக்கவில்லை என்று நினைத்துகொண்டிருந்தேன். லால் சிங்க சந்த் திரைப்படத்திற்கு பிறகு சாம்பியன்ஸ் என்ற படத்தில் நடிக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். படத்தின் கதை மிகவும் அழகானது. ஆனால் எனது குடும்பத்துடன் இருக்க வேண்டும் என்பதால் அந்த படத்தில் நடிக்க வேண்டாம் என்று முடிவு செய்துவிட்டேன்” என்று கூறினார். 

From around the web