ரூ.180 கோடி அசையும் சொத்து.. விஜய் சேதுபதிக்கு ரூ. 25 லட்சம் கடன்! வேட்புமனுவில் அதிரடி காட்டிய ஆதவ் அர்ஜுனா!
தவெக கட்சியின் முக்கிய நிர்வாகியான ஆதவ் அர்ஜுனா, வில்லிவாக்கம் தொகுதியில் களம் இறங்குகிறார். அவர் சமர்ப்பித்துள்ள சொத்து விவரங்கள் அரசியல் மற்றும் திரையுலக வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.
ஆதவ் அர்ஜுனாவின் சொத்து விவரங்கள்: அசையும் சொத்து: ரூ. 180 கோடி, அசையா சொத்து: ரூ. 17.49 கோடி, வருமானம் (2024-25): ரூ. 11.10 கோடி, கையிருப்பு & வங்கி இருப்பு: ரொக்கமாக ரூ. 1.69 கோடியும், வங்கிக் கணக்குகளில் ரூ. 17.53 கோடியும் வைத்துள்ளார், ரூ. 2.29 கோடி மதிப்புள்ள 1,691 கிராம் (சுமார் 211 சவரன்) தங்க நகைகள் உள்ளன.

ஆதவ் அர்ஜுனா மற்றவர்களுக்கு வழங்கியுள்ள கடன் விவரங்கள் மிகவும் சுவாரஸ்யமாக உள்ளன. மக்கள் செல்வன் விஜய் சேதுபதிக்கு ரூ. 25 லட்சம் கடன் வழங்கியிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தனது தங்கை சீதாலட்சுமிக்கு ரூ.46 கோடி கடன் கொடுத்துள்ளார். 'Voice of Common' என்ற நிறுவனத்திற்கு மட்டும் ரூ. 66 கோடி கடன் வழங்கியுள்ளார்.
ஆதவ் அர்ஜுனாவை விட அவரது மனைவி பெயரில் அதிகப்படியான அசையா சொத்துக்கள் உள்ளன. அசையும் சொத்து: ரூ. 162 கோடி, அசையா சொத்து: ரூ. 83.22 கோடி, வங்கி கடனாக ரூ. 26.26 கோடி உள்ளது.

ரூ. 20.50 லட்சம் மதிப்பிலான இன்னோவா கிரிஸ்டா, மாருதி ஆல்பா கார்கள் மற்றும் ஒரு ராயல் என்பீல்டு பைக் வைத்துள்ளார். அரசுக்குச் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையாக ரூ. 1.88 கோடி உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
தனது பிரமாணப் பத்திரத்தில் கரூரில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கையும் அவர் குறிப்பிட்டுள்ளார். பாரதிய நியாய சன்ஹிதா (BNS) பிரிவுகள் 105, 110, 125(B), 223 ஆகியவற்றின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதை வெளிப்படையாகப் பதிவு செய்துள்ளார்.
