நெகிழ்ச்சி வீடியோ... குட்டி சறுக்கி விழுந்ததால் பதறித் துடித்த தாய் யானை!
கேரள மாநிலம் வயநாடு வனப்பகுதியை ஒட்டிய சாலையில், குட்டி யானை ஒன்று செங்குத்தான சரிவில் சறுக்கி விழுந்ததைக் கண்டு தாய் யானை பதற்றத்துடன் அதை மீட்கப் போராடிய காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
வயநாடு வனப்பகுதியை அடுத்துள்ள மலையோரப் பாதையில் யானைக் கூட்டம் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது தாய் யானைக்குப் பின்னால் நடந்து வந்த சிறிய குட்டி யானை, பாதையின் ஓரமாக இருந்த செங்குத்தான சரிவில் எதிர்பாராதவிதமாகச் சறுக்கி கீழே விழுந்தது.
தன் குட்டி ஆபத்தில் சிக்கியதைக் கண்ட தாய் யானை உடனடியாகப் பதறியடித்துக்கொண்டு சரிவை நோக்கி இறங்கியது. சிறிதும் தாமதிக்காமல் தனது தும்பிக்கையாலும் கால்களாலும் குட்டியைத் தாங்கிப் பிடித்து, மேலே தூக்கி விடத் தீவிரமாகப் போராடியது.
அருகிலிருந்த கண்காணிப்புப் கேமராவில் பதிவான இந்த நெகிழ்ச்சியான மற்றும் உணர்ச்சிப்பூர்வமான வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகிப் பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. தாய்மைக்கு மிருகங்கள் விலக்கல்ல என்பதை உணர்த்தும் இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
